AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு கொடுத்த சென்சார் அப்டேட்!

Demonte Colony 3 Censor Update: நடிகர் அருள்நிதியின் நடிப்பில் முழுவதும் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள புது படம்தான் டிமாண்டி காலனி 3. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. தற்போது இப்படத்தின் சென்சார் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு கொடுத்த சென்சார் அப்டேட்!
டிமாண்டி காலனி 3Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Jul 2026 17:36 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் அஜய் ஞானமுத்து (Director Ajay Gnanamuthu). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் உருவாகிவருகிறது. கடைசியாக இவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2). 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இதில் அருள்நிதி (Arulnithi), பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar), மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் அர்ச்சனா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3) படம் உருவாகியுள்ளது.

இந்த படமும் ஹாரர் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகிவக்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இதற்கு சென்சார் குழு சான்றிதழை வழங்கியுள்ளது

இதையும் படிங்க: ஜிவிஎம் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… தொடங்கியது புதுப் படத்தின் ஷூட்டிங்!

டிமாண்டி காலனி 3 படத்தின் சென்சார் அப்டேட்:

அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பில் உருவாகியுள்ள டிமாண்டி காலனி 3, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. கடந்த 2024ல் வெளியான டிமாண்டி காலனி 2 படத்தின் தொடர்ச்சியாக இது தயாராகியுள்ளது. அந்த விதத்தில் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தணிக்கைக்குழு “ஏ” தரச் சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளதாம். அதன்படி இப்படத்தை 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ பதிவை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்ட டிமாண்டி காலனி 3 பட சென்சார் குறித்த வீடியோ:

டிமாண்டி காலனி 3 படமானது 2026ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் ஹாரர் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் அருள்நிதியுடன் நடிகர் குரு சோமசுந்தரமும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் . இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது.

இதையும் படிங்க: தியேட்டரில் 50 நாட்களைக் கடந்தது பிளாஸ்ட் படம் – மகிழ்ச்சியில் படக்குழு!

இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us