Demonte Colony 3: டிமாண்டி காலனி 3 தீவிர திகில் திரைப்படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!
Demonte Colony 3 Story Synopsis: நடிகர் அருள்நிதி மற்றும் பிரியங்கா பவனி சங்கர் நடிப்பில் கடந்த 2024ம் ஆனதில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த படம்தான் டிமாண்டி காலனி 2. இப்படத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3 படமானது உருவாகியுள்ள நிலையில், இப்படமானது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் டிமாண்டி காலனி (Demonte Colony). இப்படத்தில் அருள்நிதி (Arulnithi) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu) இயக்கியிருந்தார். இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு, டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2) படமானது வெளியாகியிருந்தது. இதில் அருள்நிதி ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார், மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) நாயகியாக நடித்திருந்தார். இப்படம் பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருந்த நிலையில், வசூல் மற்றும் விமர்சனங்கள் வாரியாக சிறப்பான வரவேற்பு இருந்தது. திகில் மற்றும் ஹாரர் காட்சிகளையுடன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படங்களின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3) படமானது உருவாகியுள்ளது.
இப்படத்திலும் அதே நடிகர்கள் இணைந்து நடிக்கும் நிலையில், சிறப்பின் வேடத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் டிமாண்டி காலனி 3 படத்தின் கதை எவ்வாறு மற்றும் கிளைமேக்ஸ் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!
டிமாண்டி காலனி 3 படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் அஜய் ஞானமுத்து:
அந்த பத்திரிக்கை நேர்காணலில் பேசியிருந்த அஜய் ஞானமுத்து, “டிமாண்டி காலனி படத்தை உருவாக்கும்போது, இரண்டாம் பாகம் அல்லது மூன்றாம் பாகம் எடுப்பதற்கு எந்தத் திட்டமும் பிளானும் இல்லை. ஆனால், கதையைப் பற்றி நாங்கள் ஆழமாகச் சிந்தித்தபோது, இன்னும் பல பாகங்களுக்கு வாய்ப்பு இருப்பது போல் உணர்ந்தோம். இந்த தொடரின் சிறந்த அம்சங்களில் இதுவும் ஒன்று. டிமாண்டி காலனியில் விஷயங்கள் ஏன் அப்படித் தொடங்கின, நிகழ்வுகள் ஏன் இப்படி நடக்கின்றன, மற்றும் அந்த லைபிரேரியன் உண்மையில் யார் என்பதை ஆராய்வதே இந்தத் தொடர் பாகங்களின் முக்கிய சிறப்பம்சமாகும், இவைதான் இந்தப் பாகத்தின் முக்கியக் கூறுகள்.
இதையும் படிங்க: சல்மான்கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?
டிமாண்டி காலனி 3 படம் ஒரு தீவிரமான திகில் படமாக இருக்கும். மிகவும் விறுவிறுப்பாகவும், உண்மையாகவே பயமுறுத்துவதாகவும் இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பயப்படாமல் யாரும் வெளியேற முடியாது” என அதில் அவர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு இப்படம் திரில்லராக இருக்குமா? என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிமாண்டி காலனி 3 பற்றி இயக்குநர் பேசியது தொடர்பான பதிவு:
#AjayGnanamuthu Recent:
When making #DemonteColony, there was no plan at all for a second part or a third part. But when we thought deeper about the story, it felt like there was scope for even more parts. That’s one of the best aspects of this franchise.
A key highlight of… pic.twitter.com/c1Ko9HpPia
— Movie Tamil (@_MovieTamil) May 18, 2026
டிமாண்டி காலனி 3 படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமானது ஹாரர் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வெளியாகி வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.