AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மோகன்லாலின் லூசிஃபர் 3 கன்ஃபார்மா வரும்… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

Mohanlals Lucifer 3 Is Definitely Happening | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து தயாரிப்பாளர் பேசியது வைரலாகி வருகின்றது.

மோகன்லாலின் லூசிஃபர் 3 கன்ஃபார்மா வரும்… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்
எம்புரான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 22:45 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அதிகப்படியான படங்கள் சீக்குவல்களாக இருக்கிறது. முதல் பாகம் எப்படி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றதோ அதே போல இரண்டு மற்றும் மூன்றும் என அடுத்தடுத்த பாகங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த த்ரிஷ்யம் 3 படம் வருகின்ற 21-ம் தேதி மே மாதம் 2026- ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் முன்னதாக இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

மோகன்லாலின் லூசிஃபர் 3 கன்ஃபார்மா வரும்:

இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ் சுகுமாரனின் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லூசிஃபர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படங்களின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரம்பாவூர் சமீபத்தில் லூசிஃபர் படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது நிச்சயமாக லூசிஃபர் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kamal Haasan: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… யார் கையறுத்துக்கொண்டு திருமணம் செய்தது என நிரூபிப்பேன் – ஆர்த்தியின் தாய் சுஜாதா பரபரப்பு பேச்சு!

Follow Us