ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படக்குழு – எப்போது தெரியுமா?
Dhurandhar 2: The Revenge will release Jio Hotstar | நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த ரன்வீர் சிங் கடந்த இரண்டு படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அடித்தடுத்து வெளியான துரந்தர் 1 மற்றும் துரந்தர் பாகம் 2 என இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து 1000 முதல் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இது ரன்வீர் சிங் படங்களில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை இயக்குநர் ஆதித்யா தார் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டாம் பாகத்திற்கும் முதல் பாகத்திற்கும் பெரிய அளவில் இடைவெளி இல்லாமல் படக்குழு அடுத்தடுத்து இந்தப் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டது.




ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது துரந்தர் 2 படக்குழு:
இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர்.மாதவன், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி, கௌரவ் கெரா, டேனிஷ் பாண்டோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், அதன்படி துரந்தர் 2 படம் வருகின்ற ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் தகவல்
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Aandhi banke jo aa raha hai usse DHURANDHAR kehte hain.🔥
Watch Dhurandhar The Revenge, Raw & Undekha. Grand Digital Premiere on June 4th at 7 PM, starts streaming from June 5th only on JioHotstar.#Dhurandhar2OnJioHotstar #DhurandharTheRevenge #RawAndUndekha@RanveerOfficial… pic.twitter.com/w73rLgM06F
— JioHotstar (@JioHotstar) May 15, 2026
Also Read… Marshal: கருப்பு படத்தை தொடர்ந்து சிக்கலில் கார்த்தியின் மார்ஷல் படம்? – விவரங்கள் இதோ!