கருப்பு படத்தின் ரிலீஸ் சிக்கல்… போராட்டத்தில் குதித்த சூர்யா ரசிகர்கள்
Suriya fans protest in Pondicherry | நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த கருப்பு படம் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டதால் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி ரெட்ரோ படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் ஆர்வமுடன் இருந்தனர். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என்று அதிக அளவில் அஜித் குமாரின் படங்களுக்கே கேட்டு வந்தனர். அந்த வரிசையில் அடுத்ததாக சூர்யாவும் கருப்பு படத்திற்காக இணைந்தார். இதனை கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி காமெடியாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர்களின் காத்திருப்பு அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக கருப்பு படம் மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.




கருப்பு பட தயாரிப்பாளருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சூர்யா ரசிகர்கள்:
இந்த நிலையில் இன்று கருப்பு படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் படம் காலை வெளியாகாது என்று தயாரிப்பாளர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மேட்னி காட்சி வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த சிக்கலுக்கு காரணம் தயாரிப்பாளர்கள் சிலருக்கு உரிய நேரத்தில் பணத்தை கொடுக்காததுதான் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது. இதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் உள்ள சூர்யா ரசிகர்கள் கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Sivekarthikeyan: வேலும் மயிலும்.. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் முதல் இன்டீ பாடல் வெளியானது!
இணையத்தில் வைரலாகும் போராட்ட வீடியோ:
#Suriya Fan’s – #Karuppu Release Issue
Struggle.
pic.twitter.com/kuEynMP0jh— Movie Tamil (@_MovieTamil) May 14, 2026
Also Read… DC Movie: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த ‘டிசி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!