கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி ரத்தாக என்ன காரணம்? தயாரிப்பாளர் சொன்ன விசயம்
Karuppu Movie: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் காலை 9 மணி சிறப்பு காட்சியாக வெளியாக வேண்டிய நிலையில் தற்போது படத்தின் சிறப்பு காட்சி ரத்தாகி மதிய காட்சி முதலே படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இரண்டு ஆண்டுகளாக தயாராகி இன்று வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் தான் கருப்பு. இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள 45-வது படம் ஆகும். கடந்த 2024-ம் ஆண்டே இந்த கருப்பு படத்தின் பணிகள் தொடங்கி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ன நிலை என்று தொடர்ந்து ரசிகர்களும் கேள்வி எழுப்ப தொடங்கினர். தொடர்ந்து இந்தப் படம் வருமா வராதா என்ற கேள்விகளும் வரத் தொடங்கியது. இப்படி இருக்கும் நிலையில் கருப்பு படம் இன்று 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா என்று படக்குழு படு பிசியாக கருப்பு படத்தை புரமோஷன் செய்து வந்தனர். இப்படி வரிசையான நிகழ்வுகள் படம் நிச்சயமாக வெளியாகும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்க இருந்த சிறப்பு காட்சி ரத்தாவதாக தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி ரத்தாக என்ன காரணம்?
கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தவிர்க்க முடியாத காரணங்களால், ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் மதிய காட்சி வருமா வராதா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இப்படி இருக்கும் சூழலில் சிறிய ஃபினாசியல் பிரச்சனை காரணமாகவே இந்த காட்சி ரத்து செய்யப்பட்டது என்றும் அதனை நடிகர் சூர்யா தலையிட்டு சரி செய்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்… எப்போது தெரியுமா?
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Due to unavoidable reasons 9am shows will be cancelled for Karuppu. Our sincere apologies to everyone!
— SR Prabu (@prabhu_sr) May 13, 2026