AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி – வைரலாகும் வீடியோ

Director Venky Atluri Attends Karuppu Film Event | ஹைதராபாத்தில் இன்று கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த விழாவில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி – வைரலாகும் வீடியோ
வெங்கி அட்லூரி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 22:36 PM IST

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வரிசையாக வெளியாக உள்ளது. அதன்படி கருப்பு படம் சூர்யாவின் 45-வது படமாக உருவானது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மிகவும் வித்யாசமான கதையில் இதுவரை நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக மாதிரி இந்தப் படம் உருவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முன்னதாகவே முடிவடைந்து இருந்தாலும் கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு பிறகே வெளியிட வேண்டும் என்று படக்குழு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெளியீடு வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

கருப்பு பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி:

இந்த நிலையில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்த நிலையில் கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருகின்றது. இந்த விழாவில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியும் கலந்துகொண்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி – வாழ்த்தும் பிரபலங்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம் – நடிகர் மோகன்லால்

Follow Us