AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம் – நடிகர் மோகன்லால்

Mohanlal talks about Thalapathy Vijay | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் மோகன்லால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான தளபதி விஜய் குறித்து பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம் – நடிகர் மோகன்லால்
விஜய் மற்றும் மோகன்லால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 15:07 PM IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக பேட்ரியாட் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிகர் மம்முட்டியும் நடித்து இருந்தார். மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்தது அவர்களின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் த்ரிஷ்யம் 3. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகமும் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற 21-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் படக்குழுவினர் உடன் இணைந்து மோகன்லால் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இந்தப் பேட்டியில் நடிகர் மோகன்லால் தமிழ் நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான தளபதி விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம்:

அதன்படி மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தளபதி விஜய் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், திரைப்படங்களின் வாயிலாக எம்.ஜி.ஆர் போன்ற ஆளுமைகளைப் போலவே மக்களையும் பெரிதும் பாதித்துள்ளன. நாங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை கணக்கில் கொள்வதில்லை. அது முற்றிலும் வேறானது. அவரது நட்சத்திர அந்தஸ்து மிக பிரம்மாண்டமானது. அது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலமாகும் என்றும் நடிகர் மோகன்லால் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்

இணையத்தில் வைரலாகும் நடிகர் மோகன்லால் பேச்சு:

Also Read… டப்பிங் பணியை நிறைவு செய்தது பரிமளா & கோ படக்குழு… ரிலீஸ் எப்போது

Follow Us