AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள மம்முட்டி – மோகன்லால்… எப்படி இருக்கு பேட்ரியாட் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!

Patriot Movie X Review Here: மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உள்ள பேட்ரியாட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் மக்கள் கொடுத்த விமர்சனம் என்ன என்று பார்க்கலாம்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள மம்முட்டி – மோகன்லால்… எப்படி இருக்கு பேட்ரியாட் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!
பேட்ரியாட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 May 2026 11:36 AM IST

மலையாள சினிமாவில் பொதுவாகவே நடிகர்களிடையே ஈகோ என்பது கிடையாது என்றே சொல்லலாம். அதற்கு உதாரணம் உச்ச நடிகர்கள் முதல் கடைநிலையில் உள்ள நடிகர்கள் வரை ஒருவர் மற்றொருவரின் படங்களில் நடிப்பதில் எந்த ஈகோவும் காட்டாமல் நடித்து வருகின்றனர். இது மலையாள சினிமாவை பொருத்தவரை மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்கள் நடிகர்களாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அதிக அளவில் ஒன்றாக படங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 18 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இப்படி இருக்கும் சூழலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடித்து உள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்திற்கு பேட்ரியாட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் ஃபாசில், குஞ்சகபோபன், நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, ராஜீவ் மேனன், வினீத் தட்டில் டேவிட், பிரகாஷ் பெலவாடி, கிரேஸ் ஆண்டனி, இந்திரன், ஜரின் ஷிஹாப், ஆர்.சரத்குமார், ஜினு ஜோசப், டேனிஷ் உசேன், ஷாஹீன் சித்திக், இஷான் ஷௌகத்,
சான்யா நாயர், ஸ்ரீபார்வதி, கீதி சங்கீதா, சனல் அமன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளனர்.

பேட்ரியாட் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

முதல் பாதி விறுவிறுப்பாக உள்ளது. கதாபாத்திரங்களுடன் சேர்ந்து கதை மெதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நடிகர் தேர்வு மிகச் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. தயாரிப்புத் தரம், நேர்த்தியான திரைக்கதை.

பேட்ரியாட் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

சிறந்த நடிப்புகளுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த தேசபக்தி கதை. மம்மூட்டி கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்த, மோகன்லால் தனது அற்புதமான கதாபாத்திரப் படைப்பு மற்றும் திரைப் பிரசன்னத்தால் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுகிறார். குபோவும் ஃபஹத்தும் வலுவான ஆதரவை வழங்குகிறார்கள். பின்னணி இசையும் மற்ற பாடல்களும் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

Also Read… கீர்த்தி சுரேஷின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பேட்ரியாட் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

பேட்ரியாட் படத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் முதல் பாதியை தங்களின் கைவசம் வைத்துள்ளனர். திரைக்கதை கதையை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது, ஒரு சக்திவாய்ந்த இடைவேளைக் காட்சியுடன் முடிவடைகிறது, இப்போது இரண்டாம் பாதியில்தான் உண்மையான சோதனை.

Also Read… நூறு சாமி படத்திலிருந்து வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ

பேட்ரியாட் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

பெருநிறுவனங்களின் உளவு மென்பொருள் கண்காணிப்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய தளத்தில் கதை மற்றும் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டது. மகேஷின் அருமையான உருவாக்கம் மற்றும் படத்தொகுப்பு. இடைவேளையில் ஒரு மாஸ் தருணம். பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்.

Follow Us