AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விக்ரம் படத்தின் கதை ரோலக்ஸ் கதாபாத்திரத்திலிருந்து தொடங்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது – இயக்குனர் ரத்னகுமார்

Director Rathnakumar talks about Vikram movie: இயக்குநர் ரத்னகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்திற்கு முன்னதாக அந்த கதையில் உள்ள ரோலக்ஸ் கதாப்பாத்திரம் சார்ந்தே படத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தின் கதை ரோலக்ஸ் கதாபாத்திரத்திலிருந்து தொடங்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது – இயக்குனர் ரத்னகுமார்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Apr 2026 11:02 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் விக்ரம். நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்த விக்ரம் படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சின் ஒரு பாகமாக இந்தப் படம் அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து கிளை கதைகளாக படங்களை உருவாக்கும் திட்டத்தில் அந்தப் படத்தினை செய்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ரத்னகுமார் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விக்ரம் படத்தின் கதை இப்படிதான் தொடங்குவதாக இருந்தது:

ஆரம்பத்தில், இந்தக் கதை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருந்து தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டது. கைதி டைம் லைன் மற்றும் விக்ரம் டைம் லைன் என இரண்டு டைம் லைன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே யோசனையாக இருந்தது. இவை இரண்டும் ரோலக்ஸ் என்ற ஒரு பொதுவான வில்லன் மூலம் சந்திக்கும். இதன் மூலம், பிரபஞ்சத்தை உருவாக்கி, எல்சியு-வின் பிறப்புக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில், லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனிடம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை விவரித்தார். அப்போது, ​​விக்ரம் படத்திற்கு ஒரு முன்கதை மற்றும் பின்கதை என்ற யோசனையை கமல்ஹாசன் முன்வைத்தார். லோகேஷுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது, மேலும் அதை ஒரு முழுமையான கதையாக உருவாக்க கூடுதல் அவகாசம் கேட்டார். அந்தச் செயல்முறையின் மூலம், விக்ரம் உருவானது என்று ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

Also Read… ராக்கா படத்தில் அதிரடியாக ஆக்‌ஷன் நாயகியாக நடிக்கும் தீபிகா படுகோன் – வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கர படத்திலிருந்து வெளியானது ஐயா ஐயா லிரிக்கள் வீடியோ

Follow Us