AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களே ரெடியா?… முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

DC Movie Shooting Wrapped: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள் படம் டிசி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களே ரெடியா?… முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
டிசி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2026 12:10 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்களை இயக்கினார் இயக்குநர் லோகேஷ் கனராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் வெளியானது. அந்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து இயக்குநர் லோகேஷ் கனராஜ் படங்களை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார். இவர் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள படத்தினை இயக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங்:

தொடர்ந்து இயக்குநராக மக்களின் மனதில் இடம் பிடித்த லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாகவும் நடித்து உள்ளார். அதன்படி அவர் நாயகனாக தற்போது அறிமுகம் ஆகும் படத்திற்கு டிசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் போட்டோ

டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? அப்டேட் இதோ!

Follow Us