AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yogi Babu: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு!

Yogi Babu Join Arasan Movie: கோலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், லீட் நாயகனாகவும் படங்களில் நடித்துவருபவர் யோகி பாபு. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அந்த வகையில் இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Yogi Babu: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு!
யோகி பாபு மற்றும் சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Apr 2026 18:21 PM IST

தென்னிந்திய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்களை ஈர்த்துவருபவர் யோகி பாபு (Yogi babu). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இவர் படங்களில் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லாமல், லீட் நாயகனாகவும் நடித்துவருகிறார். இறுதியாக இவரின் நடிப்பில் கெணத்த காணோம் (Kenaththa Kanom) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது என்று கூறலாம். இப்படத்தை அடுத்ததாக இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குநர் அட்லீ (Atlee) இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிக்கும் ராக்கா (Raaka) படத்தில் யோகி பாபு நடித்துவருகிறார். மேலும் ரஜினிகாந்துடன் (Rajinikanth) ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துள்ளார்.

அந்த வரிசையில், நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) இயக்குநராக அறிமுகமாகும், தி அன் ஆர்டினரி மேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும் சமீபகாலமாக இவர், சிலம்பரசனின் அரசன் (Arasan) படத்தில் நடித்துவருவதாக பேசப்பட்டுவந்தது. அந்த வகையில் அதை யோகி பாபு உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஏக்கம்தான் ஆனால்.. அஜித் சாருடன் படம் இயக்க முடியாமல்போனது – இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு!

சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் யோகி பாபு பேசுகையில் “அரசன் திரைப்படம் வட சென்னை படத்திற்கு உள்ளே வருகிறதோ? அல்லது இல்லையோ என எனக்கு தெரியாது. ஆனால் நான் அரசன் படத்தில் இருக்கிறேன். சிலம்பு சார் சூப்பராக நடித்துவருகிறார். சிலம்பரசன் சாரின் காம்போ பிளாஸ்ட்டாக இருக்கும். இப்படத்தில் எனது கதாபாத்திரம் ஒரு நல்ல கதாபாத்திரமாக இருக்கும். படம் முழுவதும் இருக்கும்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் – 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!

அரசன் திரைப்படம் குறித்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட பதிவு:

சிலம்பரசனின் அரசன் படமானது முற்றிலும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மே அல்லது ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us