அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்… பிரச்சனையை முடிக்க முன்வந்த சிலம்பரசன்
STR was reportedly willing to return the advance for Corona Kumar : அரசன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக நடிகர் சிலம்பரசன் தற்போது முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வந்த நடிகர் சிலம்பரசனின் சினிமா கெரியலில் ஒரு சரிவு இருந்தது. அதன்படி தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தோல்வியை சந்திந்தது. மேலும் சிம்புவும் சரியான டயட் இல்லாமல் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். படங்களின் தோல்வி மட்டும் இல்லாமல் சிம்பு மீது படக்குழுவினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். இனி சிம்பு சினிமாவில் வெற்றிப்பெற முடியாது என்று அனைவரும் மனதிலும் ஒரு எண்ணம் ஏற்றப்பட்ட போதுதான் உடல் எடையை எல்லாம் குறைத்து சினிமாவில் கம்பேக் கொடுத்தார் நடிகர் சிலம்பரசன்.
அதன்படி சிம்பு ஈஸ்வரன் படத்தில் உடல் எடையை குறைத்து தோன்றினாலும் அடுத்ததாக வெளியான மாநாடு படம் அவரை மாஸாக காட்டியது. அது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




முன்பணத்தை திருப்பி அளிக்க நினைக்கும் சிம்பு… முரண்டு பிடிக்கும் ஐசரி கணேஷ்:
வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் ஆகியோருக்கிடையேயான கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்த ‘கொரோனா குமார்’ படத்திற்காக, முன்பணமாகப் பெற்றிருந்த 5 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க சிலம்பரசன் முன்வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும், அப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட நஷ்டத்தைக் காரணம் காட்டி, தயாரிப்பாளர் தரப்பு 7.5 கோடி ரூபாயைக் கோரியது. இந்நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடர வேண்டுமானால், சிலம்பரசன் 7.5 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… கமல் சாரோட அந்த படத்தைப் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கம் வரல – சேரன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
– The shoot of #Arasan, directed by Vetrimaaran and starring #SilambarasanTR, has been halted due to a dispute between the actor and producer Ishari K. Ganesh.
– #STR was reportedly willing to return the ₹5 crore he received as an advance for #CoronaKumar, which was to be… pic.twitter.com/ubV9fkVMzm
— Movie Tamil (@_MovieTamil) April 9, 2026
Also Read… இது கானா டைம்… மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது பப்பாளி பழமே பாடல்!