AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நானும் சிவகார்த்திகேயனும் ஒரே விசயத்தை ஃபீல் பண்ணினோம் – சந்தோஷ் நாராயணன்

Santhosh Narayanan talks about working with actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 26-வது படமாக உருவாகி வருகின்றது சேயோன் படம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியது வைரலாகி வருகின்றது.

நானும் சிவகார்த்திகேயனும் ஒரே விசயத்தை ஃபீல் பண்ணினோம் – சந்தோஷ் நாராயணன்
சிவகார்த்திகேயன்- சந்தோஷ் நாராயணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Apr 2026 20:16 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஜீவா, விக்ரம் என பலரது படங்களுக்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்த சேயோன் படத்தினை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நானும் சிவகார்த்திகேயனும் ஒரே விசயத்தை ஃபீல் பண்ணினோம்:

அதன்படி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, சேயோன் படத்திற்காகப் பணியாற்றியபோது, ​​சிவகார்த்திகேயனும் நானும், “ஏன் நாம் இதற்கு முன்பே இணைந்து பணியாற்றவில்லை?” என்று பலமுறை நினைத்துக்கொண்டோம். ரெமோ மற்றும் மாவீரன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்ற நாங்கள் முயன்றோம்; ஆனால், அது கைகூடவில்லை. சேயோன்  திரைப்படம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும். நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். சிவாவின் ஆரம்பகாலப் போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். தொலைக்காட்சியிலிருந்து ஒருவர் சினிமாத் துறைக்கு வர முடியும் என்ற சாத்தியத்தை, சிவாவே முதன்முதலில் உடைத்து நிரூபித்துக் காட்டினார்.

Also Read… Mr. X Movie: ஆர்யா – கௌதம் கார்த்திக்கின் ‘மிஸ்டர் எக்ஸ்’ பட ரிலீஸ் எப்போது? – படக்குழு அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் சந்தோஷ் நாராயணன் பேச்சு:

Also Read… பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ஜெய்… டெக்ஸ்லா படக்குழு வெளியிட்ட சிறப்பு பதிவு

Follow Us