என்னுடைய இசையில் அது சிறந்த படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
Music Director Santhosh Narayanan: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் சிறந்த படைப்பு எது என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் இவருக்கு மட்டும் அறிமுகம் இல்லை இயக்குநர், நடிகர்கள் என பலர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி சினிமாவில் முன்னணி இடத்தை வகிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன சந்தோஷ நாராயணன் தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படங்களுக்கு இசையமைப்பது மட்டும் இன்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 13 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இவரது இசையில் இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் ரெட்ரோ, சிக்கந்தர் மற்றும் தலைவன் தலைவி என அடுத்தடுத்து 3 படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




என்னுடைய இசையில் அது சிறந்த படைப்பாக இருக்கும்:
அதன்படி அந்தப் பேட்டியில் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது, கல்கி 2 எனது சிறந்த படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் மிகுந்த முயற்சி எடுத்து வருகிறோம். ‘கல்கி 2898 AD’ எங்களுக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே கல்கி பாகம்-2க்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். அனைவரும் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால் தேதி ஒத்துழைக்கும்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று அந்தப் பேட்டியில் சந்தோஷ் நாராயணன் தெரிவித்து இருந்தார்.
Also Read… உலகம் முழுவதும் சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்
இணையத்தில் வைரலாகும் சந்தோஷ் நாராயணன் பேச்சு:
“I hope #Kalki2 is going to be my best work🔥. We are putting a lot of effort. #Kalki2898AD was a mega learning for all of us🎶. We have already started work for Kalki Part-2. All are mega stars, once date align, shooting will begin✅”
– #SanthoshNarayananpic.twitter.com/AEGd0TP7qM— AmuthaBharathi (@CinemaWithAB) January 23, 2026
Also Read… பர்த்டே பாய் டொவினோ தாமஸின் நடிப்பில் இந்த தல்லுமாலா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!