AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pallichattambi: ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்!

Pallichattambi Movie Trailer : மலையாள புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். இவரின் நடிப்பில் பான் இந்திய படமாக தயாராகியுள்ள படம்தான் பள்ளிச்சட்டம்பி. இதில் கயாடு லோஹரும் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படத்தின் அதிரடி திரில்லர் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Pallichattambi: ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்!
பள்ளிச்சட்டம்பி பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Apr 2026 11:34 AM IST

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழில் தனுஷின் (Dhanush) மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த விதத்தில் இவர் தற்போது தொடர்ந்து மலையாளத்தில் வித்தியாசமான கதைங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் இறுதியாக கல்யாணி பிரியதர்ஷனின் லோகா (Lokah) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, ரசிகர்களால் ஈர்க்கப்பட்டிருந்தார். அந்த வகையில் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Joesh Antony) இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் படம்தான் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi). இந்த படமானது 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் டோவினோ தமாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார்.

இப்படம் மலையாளத்தில் இவருக்கு 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 5ம் தேதியில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் – கிரித்தி ஷெட்டி

பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் குறித்து நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:’

பள்ளிச்சட்டம்பி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இப்படத்தின் கதைக்களமானது, கேரளாவின் முதல் ஜனநாயக மாற்றத்தின் பின்னணியில், ஒரு கிறிஸ்தவப் பாதுகாப்புப் படைக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்ட, சாதுவான சுபாவம் கொண்ட இளைஞன் ஒருவன், சக்திவாய்ந்த ஒரு கம்யூனிச நாடகம் மற்றும் அதன் முன்னணி நடிகருடனான எதிர்பாராத சந்திப்பிற்குப் பிறகு, தனது விளையாட்டுத்தனமான மனப்பான்மையைக் கைவிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான் என்பதே இப்படத்தின் கதையாகும்.

இதில் டோவினோ தாமஸ் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான வேடத்தில் கையேடு லோஹரும் நடித்துள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளார் ஜேக்ஸ் பெஜாய், தனது இசையின் மூலம் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!

இந்த பள்ளிச்சட்டம்பி படமானது முழுக்க கிராமத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது விறுவிறுப்பாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என, பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us