பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ஜெய்… டெக்ஸ்லா படக்குழு வெளியிட்ட சிறப்பு பதிவு
Texla Movie Team Post A Birthday Wishes To Actor Jai: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறர் நடிகர் ஜெய். இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் டெக்ஸ்லா படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்த பகவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ஜெய். இந்தப் படத்தில் நடிகர் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய்யின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் ஜெய். தொடர்ந்து ஜாலியான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் ஜெய் பின்பு கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி நடிகர் ஜெய்யின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி அண்ட் பேபி.
காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் ஜெய். அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது வரை அடுத்தடுத்து 4 படங்கள் உருவாகி வருகின்றது. இதில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் டெக்ஸ்லா படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




ஜெய் பிறந்த நாளை முன்னிட்டு டெக்ஸ்லா படக்குழு வெளியிட்ட போஸ்ட்:
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கண்ணன் ரவி குரூப்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து வரும் படம் டெக்ஸ்லா. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இன்று 06-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் ஜெய் தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை சிறப்பிக்கும் விதமாக டெக்ஸ்லா படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
டெக்ஸ்லா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Amidst the beauty of life, a new chapter unfolds ✨
Team #Texla wishes our man @Actor_Jai a bright year ahead. Excited for this new journey together as a team!
An @ash_rajinikanth Film
Produced by @KRGOffl
Co -Produced by #DeepakRaviA @thisisysr Musical pic.twitter.com/VSDuz4XibG
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) April 6, 2026
Also Read… நா ஒத்த விரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்… ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்!