AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LIK Movie: லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ட்ரெய்லர்!

Love Insurance Kompany Movie Trailer: நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிரித்தி ஷெட்டியின் நடிப்பில் தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, தற்போது புது ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

LIK Movie: லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ட்ரெய்லர்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Apr 2026 20:00 PM IST

தமிழில் காதல் திரைப்படங்கள் என்றாலே பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN). இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்த படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (Love Insurance Kompany). இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளதே. இப்படம் கடந்த 2024ம் ஆண்டிலே பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு பின் தயாரான டிராகன் மற்றும் டியூட் போன்ற படங்கள் வெளியாகி, பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுத்து சாதனை படைத்துள்ளது. அந்த விதத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா (SJ. Suryah), யோகி பாபு, கிரித்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன், சீமான், சுனில் ஷெட்டி மற்றும் ஆனந்த ராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் எதிர்கால காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் அதிரடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சீமான் சாருடன் பேசி எனது தமிழ் வளம் வளர்ந்தது – கிரித்தி ஷெட்டி பேச்சு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ட்ரெய்லர் முழுக்க எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது. உண்மையினை காதலுக்காக ஒரு ஆப் மூலம் மக்கள் காதலை தேடுகிறார்கள். அந்த ஆப் காதலை எதிர்த்தும் பசுமை உலகம் என்ற இடத்திலும் மக்கள் வாழ்கின்றனர். பசுமை உலகிலிருந்து வந்த வாஸ், தீமாவை காதலிப்பதற்காக போராடுகிறார். LIK ஆப் காதலை நம்பும் தீமா, வாஸை காதலித்தாரா?, வாஸ் அந்த LIK ஆப்பை அழித்தாரா?என்பதே இந்த படத்தின் கதை. இப்படமானது தமிழ் சினிமாவில் புதுமையான படமாக அமைந்துள்ளது. நிச்சயம் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றிப்படமாக இது இருக்கும் என எதிர்பாட்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டாசாக இருக்கிறது. 2040ம் ஆண்டில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்ட படமாக இது அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us