AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LIK Movie: அடாவடி.. பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட 3வது பாடல் வெளியானது!

LIK Movie Adaavadi Song: தமிழில் இளம் கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. புது ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

LIK Movie: அடாவடி.. பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட 3வது பாடல் வெளியானது!
அடாவடி பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Mar 2026 19:03 PM IST

கோலிவுட் சினிமாவில் பரபரப்பு நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக 3 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 2வது படமாக அறிவிக்கப்பட்டு, தற்போது 4வது வெளியாகவுள்ள படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அந்த விதத்தில் பிரதீப் ரங்கநாதனின் படத்திற்கு முதல் முதலாக அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் இதுவரை இப்படத்திலிருந்து, தீமா தீமா, பட்டுமா மற்றும் அனிருத்தின் ஆல்பம் பாடலான எனக்கென யாருமில்லையே போன்ற பாடல்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வரிசையில் அடுத்தாக வெளியாகியுள்ள பாடல்தான் “அடாவடி” (Adaavadi). அதிரடி பாடலாக இந்த பாடல் தயாராகியுள்ள நிலையில், தற்போது இணையதளங்களில் வைரலாகபரவிவருகிறது.

இதையும் படிங்க: விக்ரம்.. லியோ படத்திற்கு இணையானது.. லீடர் உங்களை 100% திருப்திப்படுத்தும் – லெஜெண்ட் சரவணா அதிரடி பேச்சு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அடாவடி பட பாடல் குறித்த பதிவு:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் சென்சார் அப்டேட்:

பிரதீப் ரங்கநாதனின் இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த ராஜ், கௌரி ஜி கிஷன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கிட்டத்தட்ட 2040ம் ஆண்டில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும், அதன் எமோஷனல் போன்ற கதையில் அமைந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் காதலுக்காக கம்பெனியை நாடும் மக்கள் போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: ஜாய் கிரிசில்டா குழந்தை மரபணு சோதனை.. மாதம்பட்டி ரங்கராஜ்க்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட 5 முதல் 6 முறைக்கும் மேல் அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக தயாராகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளதாம். இந்த முறை இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திப்போகாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us