Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டா குழந்தை மரபணு சோதனை.. மாதம்பட்டி ரங்கராஜ்க்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Joy Crizildaa Child Case Verdict: மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், இவர்களுக்குள் பல பிரச்சனைகள் நடந்து வழக்காக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் ஜாய் கிரிசல்ட்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை என உறுதியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் வெளியாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி (Cook With Comali). இந்த நிகழ்ச்சியின் நடுவராகவும், நடிகர் மற்றும் பிரபல சமையல் கலைஞராகவும் இருந்துவருபவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழில் மெகந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற திரைப்படங்களில் நடிகர்கவும் நடித்துள்ளார். அந்த விதத்தில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், விவகாரத்திற்கு முன்பே பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணம் செய்திருந்த சில மாதங்களிலே இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர். அந்த விதத்தில் பின் இவர்கள் இருவருக்குள்ளும் மன கசப்பு ஏற்பட்டிருந்த நிலையில், எனது சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நீடித்துவருகிறது.
ஜாய் கிரிசில்டாவின் குழந்தை, தனது இல்லை என்றும், டிஎன்ஏ பரிசோதனை செய்தபிறகே அது தனது குழந்தையா? இல்லையா என்பது தெரியும் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் குழந்தைக்கான டிஎன்ஏ பரிசோதனை சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தைதான் என உறுதியாகியுள்ளது.




இதையும் படிங்க: விக்ரம்.. லியோ படத்திற்கு இணையானது.. லீடர் உங்களை 100% திருப்திப்படுத்தும் – லெஜெண்ட் சரவணா அதிரடி பேச்சு!
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் வழக்கு, தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், குழந்தையின் டிஏன்ஏ பரிசித்தானை மாதம்பட்டி ரங்கராஜுடன் ஒத்துப்போகிறது. அந்த விடத்த்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ஜாய் கிரிசில்டாவின் குழந்தை, மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ உடன் ஒத்துப்போகிறது என்றும், பரிசோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்ட்டாவிற்கும் பிறந்த குழந்தைதான் என உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளி சீசன் 7 எப்போது ஆரம்பம்? போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா குழந்தை டிஎன்ஏ பரிசோதனை :
முன்னதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவின் குழந்தையை டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்றும், அதில் தனது குழந்தை என உறுதியானால் அதன் வாழ்நாள் வரை பார்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது டிஏன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ள நிலையில், குழந்தைக்கான நீதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.