AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த மதராஸி பட தயாரிப்பாளர்!

Madharaasi Producer filed a complaint against AR Murugadoss: மதராஸி படத்திற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன பட்ஜெட்டை தாண்டி அதிக அளவில் செலவை இழுத்து விட்டதாக அவர் மீது படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்தது இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த மதராஸி பட தயாரிப்பாளர்!
மதராஸிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 Mar 2026 12:41 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்த மதராஸி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 100 கோடி ரூபாய் என்பது நல்ல வசூல் என்றாலும் அந்த பணத்திற்கு அதிகமாக படத்திற்கு செலவு செய்யபட்டு இருந்தால் அது நஸ்டம் என்றே அர்த்தம். அப்படி 100 கோடிக்கு அதிகமாக இந்தப் படத்திற்கு செலவு ஆகி இருப்பதாகவும் குறித்த பட்ஜெட்டிற்கு அதிகமாக இயக்குநர் படத்திற்கான செலவை இழுத்துவிட்டுவிட்டதாகவும் தயாரிப்பாளர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்:

மதராசி தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் இந்தப் படத்திற்கு 115 கோடி ரூபாய் பட்ஜெட் என்று குறிப்பிட்டார், ஆனால் படத்தை முடிக்கும்போது, ​​அவர் சரியாகத் திட்டமிடாததாலும், அதே நேரத்தில் சிக்கந்தர் படத்தின் பணிகளில் ஈடுபட்டுகொண்டிருந்ததாலும், பட்ஜெட் 170 கோடியாக உயர்ந்தது. எனவே, அதற்கு ஈடாக தயாரிப்பாளர் 10 கோடி ரூபாய் கோரினார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சில் ஏ.ஆர்.முருகதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், அதற்கு ஈடாக ஏ.ஆர்.முருகதாஸ், ராமணா 2 (தெலுங்குப் பதிப்பு) படத்தின் கதையை எழுதி அந்தத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இலவசமாக வழங்குவார் என்ற முடிவுக்கு வந்தனர்.

Also Read… ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என் தம்பி விக்னேஷ் சிவனுக்காக அந்தப் படத்தில் நடித்தேன் – சீமான் பேச்சு

Follow Us