ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது
Ram In Leela movie shooting wrapped : நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல வெள்ளித்திரையிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண் பாவம் பொல்லாதது ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக இறுதியாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான் ஆண் பாவம் பொல்லாதது படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ராம் இன் லீலா படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.




ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது:
நடிகர் ரியோ ராஜ் நாயகனாகவும் நடிகை வர்த்திகா நாயகியாகவும் நடித்துள்ள படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் முனுஷ்காந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் வீடியோ வெளியிட்டு படக்குழு கொண்டாடி உள்ளது. மேலும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்
நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
That’s a WRAP for #RAMinLEELA sprinkled with memories and chaos✨🥳🎬#TheMadnessBegins@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @ramachandr5017 @thinkmusicindia @024vartika @i_nayan_aElza @mallikarjundp @Gdurairaj10 @chetan_k_a pic.twitter.com/kJpSQwJK2L
— Rio raj (@rio_raj) March 28, 2026
Also Read… ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்