AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேடி படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட ரியோ ராஜ்!

Maddy Movie Pooja Video: நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைஈர்த்து வருகின்றது.

மேடி படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட ரியோ ராஜ்!
மேடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Mar 2026 20:21 PM IST

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார் ரியோ ராஜ். இவர் ஒரு பாட்டு சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய போதே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் ரியோ ராஜ். சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நாயகனாக நடித்தார் ரியோ ராஜ். இந்த சீரியலில் நடித்தப் பிறகு தமிழகத்தில் உள்ள மூஉலை முடுக்கு எல்லாம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் ரியோ ராஜ். இவரது நடிப்பில் வெள்ளித்திரையில் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவிலை என்றாலும் பிறகு அடுத்தடுத்து வெளியான படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல இறுதியாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெலியன ஆண் பாவம் பொல்லாதது படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து ரியோ ராஜ் ராம் இன் லீலா படத்தில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மேடி படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட ரியோ ராஜ்:

அதன்படி நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு மேடி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று 25-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு நடைப்பெற்றது. மேலும் அந்த விழாவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த பூஜை வீடியோவை நடிகர் ரியோ ராஜ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!

நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

Follow Us