AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rio07 Movie: ரியோ ராஜின் 7வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம் – டைட்டில் என்ன தெரியுமா?

Rio Raj 07th Movie Shooting Pooja: தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நுழைந்து, தற்போது கதாநாயகனாக புது புது படங்களில் நடித்துவருபவர் ரியோ ராஜ். இவர் ராம் இன் லீலா என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், இவரின் புது படத்தின் ஷூட்டிங் பூஜைகள் இன்று தொடங்கியுள்ளது. மேலும் இதன் டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Rio07 Movie: ரியோ ராஜின் 7வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம் – டைட்டில் என்ன தெரியுமா?
ரியோ ராஜ் 7வது திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Mar 2026 15:57 PM IST

நடிகர் ரியோ ராஜ் (Rio Raj) தமிழில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் ரிலீஸிற்கு பிறகும் தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தார். அதில் அவருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்த திரைப்படம்தான் ஜோ (Joe). கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படமானது சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து, ஸ்வீட்ஹார்ட் (SweetHeart), ஆண்பாவம் பொல்லாதது மற்றும் சில படங்களில் கேமியோ வேடத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் உருவாகிவரும் 6வது படம் ராம் இன் லீலா (Ram In Leela). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த விதத்தில் தற்போது ரியோ ராஜ் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புது படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன்(karthikeyan)  இயக்கவுள்ளார். அந்த விதத்தில் இன்று 2026 மார்ச் 25ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

ரியோ ராஜின் 7வது திரைப்படம் :

நடிகர் ரியோ ராஜின் 7வது திரைப்படத்திற்கு “மேடி” (Maddy) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, நடிகை சானியா ஐயப்பன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே பிகில், இருகப்பற்று மற்றும் சொர்க்கவாசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் தற்போது ரியோ ராஜிற்கு ஜோடியாக புது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரோல் தி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்குகிறார். இவர் உதவி இயக்குநராக மீசையமுறுக்கு, லியோ, வாரிசு, மாஸ்டர் மற்றும் நட்பே துணை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

தனது மேடி திரைப்படம் குறித்து ரியோ ராஜ் வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இதையும் படிங்க: கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சூர்யா மற்றும் கார்த்தி!

அந்த விதத்தில் ரியோவின் 7வது படமாக மேடி உருவாகிவரும் நிலையில், இதற்கு டீசல் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படமானது ரோம்-காம் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இன்று 2026 மார்ச் 25ம் தேதியில் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு இறுதியில் அல்லது 2027ம் ஆண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Follow Us