AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kara Movie: கர படத்தில் கந்தசாமியாககே.எஸ்.ரவிக்குமார்- படக்குழு வெளியிட்ட அறிமுக போஸ்டர்!

K.S. Ravikumars Character In Kara Movie : தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், நடிகராகவும் தற்போது படங்களில் நடித்துவருபவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தனுஷின் கர படத்தில் நடித்திருக்கும் நிலையில், இப்படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

Kara Movie: கர படத்தில் கந்தசாமியாககே.எஸ்.ரவிக்குமார்- படக்குழு வெளியிட்ட அறிமுக போஸ்டர்!
கர திரைப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் கதாபாத்திரம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Mar 2026 18:19 PM IST

தனுஷின் நடிப்பில் 54வது திரைப்படமாக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கர (Kara). இதை போர் தொழில் என்ற படத்தை இயக்கி வெற்றிபெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் (Dhanush) லீட் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இது தமிழில் பிரம்மாண்ட ஹீரோக்கு ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படமாகும். இந்த படமானது முற்றிலும் கிராமத்து ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்திலும், நடிகை மாமிதா பைஜூ “செல்லி” என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அதில் இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் (KS. Ravikumar) முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. கர படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் “கந்தசாமி” (Kandhasaami) என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டியூட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் புது படத்தில் இணைந்த சூரி.. இயக்குநர் யார் தெரியுமா?

கர படத்திலிருந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் அறிவிப்பு பதிவு:

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது படங்களை இயக்குவதை தவிர்த்து, படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் தொடர்ந்து புது புது படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் கர படத்தில் கந்தசாமி என்ற வேடத்தில் நடித்துள்ளர். இதில் அவர் தனுஷின் தந்தையாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

இன்று 2026 மார்ச் 24ம் தேதியில் காலையில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த அறிமுக போஸ்டர்களும் தொடர்ந்து வெளியாக காத்திருக்கிறது. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தனுஷிற்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us