Soori: டியூட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் புது படத்தில் இணைந்த சூரி.. இயக்குநர் யார் தெரியுமா?
Soori07 Movie: தமிழில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து, தற்போது லீட் கதாநாயகனாக படத்தில் நடித்துவருபவர்தான் சூரி. இவர் தொடர்ந்து நாயகனாக படங்களில் நடித்துவரும் நிலையில், அவர் நடிக்கும் 7வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் இயக்குநர் யார் என பார்க்கலாம்.
நடிகர் சூரி (Soori) தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி மற்றும் லீட் நடிகராக இருந்த்துவருகிறார். இவர் சினிமாவில் தனது ஆரம்பகட்டத்தில் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றிவந்த நிலையில், அப்படியே படி படியாக உயர்ந்து தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) விடுதலை பார்ட் 1 (Viduthalai Part 1) படத்தின் மூலமா கதாநாயகனாக இவர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து நாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் (Maaman) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதை விலங்கு வெப் சீரிய இயக்கிய பிரசாந்த் இயக்கியிருந்தார். இது நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது.
இதையடுத்து மண்டாடி (Mandaadi) என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துவருகிறார். அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது சூரியின் 7வது படமாக (Soori07) உருவாகவுள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: அரசன் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!
சூரியின் நடிப்பில் உருவாகும் 7வது படம் குறித்த அறிவிப்பு பதிவு:
Blood 🩸 followed the flood 🌊#MythriTamil03 is #Soori07 🔥
Starring the talented @sooriofficial
Directed by the brilliant @Ravikumar_Dir
Prestigiously Produced by @MythriOfficial in Tamil and Telugu pic.twitter.com/KHTsCoPU2i
— Mythri Movie Makers (@MythriOfficial) March 24, 2026
நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை, குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற படங்களை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இதை இன்று நேற்று நாளை மற்றும் அயலான் போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளாராம். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இது மைத்ரி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 3வது தமிழ் படம் என்ற நிலையில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளதாம். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
சூரியின் புதிய திரைப்படங்கள் :
மாமன் படத்திற்கு பின், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்துவந்த படம் மண்டாடி. இப்படமானது கடல் மற்றும் மீனவர்கள் சார்ந்த ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையில் தயாராகியுள்ளது. இதில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான் பிரைம்? – வைரலாகும் தகவல்!
இதையடுத்ததாக சூரி, இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படமும் நீர் சார்ந்த ஆக்ஷன் கதையில் தயாராகவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சூரி தொடர்ந்து ஆக்ஷன் படங்களை தேர்வு செய்துவருகிறாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த படத்தை வரும் 2026 இறுதி அல்லது 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.