AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Youth Movie: சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற யூத் படக்குழு – வைரலாகும் பதிவு!

Youth Film crew Meets Silambarasan: கென் கருணாஸின் இயக்கத்தில், நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் யூத். இப்படமானது 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படக்குழு நடிகர் சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளது.

Youth Movie: சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற யூத் படக்குழு – வைரலாகும் பதிவு!
சிலம்பரசன் மற்றும் யூத் படக்குழுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Mar 2026 14:46 PM IST

கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப்படமாக வெளியானதுதான் யூத் (Youth). இந்த படத்தில் கென் கருணாஸ் (Ken Karunaas) கதாநாயகனாகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் மூலமாகத்தான் அவர் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கென் கருணாஸ் தனுஷின் (Dhanush) திரைப்படங்களிலும், வெற்றிமாறனின் படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தனது சிறுவயதிலே இயக்குநராகவும், நாயகனாகவும் இவர் அறிமுகமாகியுள்ள நிலையில், வரவேற்பை பெற்றுவருகிறார். பள்ளிப்பருவ காதல் மற்றும் மிடில்கிளாஸ் குடும்பத்தின் ஆசை போன்ற கதைக்களத்தில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படக்குழு நடிகர் சிலம்பரசனை (Silambarasan) நேரில் சந்தித்து பாராட்டை பெற்றுள்ளது.

சிலம்பரசனை நேரில் சென்று சந்தித்த கென் கருணா, அனிஷிமா , மீனாட்சி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் போன்றவர்கள் கலந்துரையாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தில் பாடியதில் மிகுந்த மகிழ்ச்சி – சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த சிலம்பரசன்!

சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

கென் கருணாஸின் இந்த யூத் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதில் அவருடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, மீனாட்ஷி, அனிஷிமா அனில்குமார், சின்னத்துரை தமிழா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க ஒரு பள்ளி சிறுவனின் கதையை வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படமானது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 5 நாட்களை கடந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூலிர்த்துள்ளது தெரியுமா?. 4 நாட்களில் இப்படம் ரூ 24.3 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 25 கோடிகளை நெருங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்… போஸ்டர் வெளியிட்ட படக்குழு

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றியிருக்கும் நிலையில், பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வார இறுதியில் கிட்டத்தட்ட ரூ 50 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கென் கருணாஸ் இயக்குநராகவும், நடிகராகவும் நுழைந்த நிலையில், இது அவருக்கு ஒரு நல்ல ஓப்பனிங் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us