Ken Karunaas: யூத் பட ட்ரெய்லரை பார்த்துட்டு தனுஷ் சார் சொன்னது இதுதான் – கென் கருணாஸ்!
Dhanushs Youth Trailer Reaction: தமிழில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் யூத். இதை கென் கருணாஸ் இயக்கி, நடித்திருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து, தனுஷ் என்ன கூறினார் என்பது குறித்து கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநராகவும், கதாநாயகனாகவும் கென் கருணாஸ் (Ken Karunaas) அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் யூத் (Youth). இப்படத்தில் அவரே லீட் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், வித்தியாசமான கதைகளத்தல் தயாராகியுள்ளது. இதற்கு முன் கென் கருணாஸின் தனுஷின் (Dhanush) வாத்தி (Vaathi), அசுரன் (Asuran) போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான விடுதலை பார்ட் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து வெறும் நடிகராக மட்டும் படங்களில் நடிக்காமல், உதவி இயக்குநராகவும் சில படங்களில் பணியற்றியுள்ளார். தனுஷின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான சில படங்களில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் முதல் படமாக, பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ளதுதான் யூத்.
இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாகி நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் தெலுங்கு செய்தியளர்கள் சந்திப்பில் கென் கருணாஸ் கலந்துகொண்டார். அதில் தனுஷ், யூத் பட ட்ரெய்லரை பார்த்துவிட்டு என்ன கூறினார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அரசன் பட கதைதான் வெற்றிமாறனின் ஃபர்ஸ்ட் ஸ்டோரியா? – இயக்குநர் ராம் சொன்ன விஷயம்!
யூத் பட ட்ரெய்லரை பார்த்த தனுஷின் ரியாக்ஷன் குறித்து கென் கருணாஸ் பேச்சு:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கென் கருணாஸ், “தனுஷ் சார் யூத் படத்தின் ட்ரெய்லரை மட்டும்தான் பார்த்தாரு. இன்னும் முழு படத்தையும் பார்க்கவில்லை. அவரு ரொம்பவே பிசி. அவரு யூத் பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்ததே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் யூத் பட ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சிக்காக அவரை நேரில் அழைக்க செல்லும்போது, அவரு கண்டிப்பாக வரமாட்டார் என நினைத்தேன்.
இதையும் படிங்க: அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு… வைரலாகும் போட்டோ!
ஏனென்றால் அவரு ரொம்பவே பிசி. பின் கடைசி நிமிடத்தில்தான் நான் வருகிறேன் என அவர் சொன்னாரு. அவரு வருவாருனு சத்தியமாக நான் நினைக்கவில்லை. இன்னும் யூத் படத்தை அவரு பார்க்கவில்லை. ட்ரெய்லரை மட்டும்தானா பார்த்தாரு. ட்ரெய்லரை பார்த்துவிட்டு அவர், ட்ரெய்லர் நல்ல வைப்பா இருக்கு, மேலும் காமெடியாகவும் இருக்கு. நீ எதை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என நினைக்கிறியோ அது இதில் இருக்கு என அவர் எண்னிடம் கூறினார்” என அந்த சந்திப்பில் கென் கருணாஸ் தெரிவித்திருந்தார்.
யூத் திரைப்படம் குறித்து கென் கருணாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
From being your biggest fan to getting my first film trailer released by you is a dream come true moment ⭐️
Thank you so much for being so kind anna 🤗 https://t.co/EpQQEkx7nr
— Ken Karunaas (@KenKarunaas) March 7, 2026
இந்த யூத் படத்தில் கென் கருணாஸுடன் நடிகர்கள் அனிஷிமா அனில்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, மீனாட்சி போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் முழுக்க பள்ளிப்பருவ காதல் மற்றும் மிடில்கிளாஸ் ககுடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரீ- புக்கிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இப்படம் நிச்சயம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.