AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!

Dhanush Praises Ken Karunaas: தென்னிந்திய சினிமாவில் உச்ச கதாநாயகனாக கலக்கிவருபவர் தனுஷ். இவர் இன்று 2026 மார்ச் 13ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்த யூத் பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், கென் கருணாஸ் குறித்து பல சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

Dhanush: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!
தனுஷ் மற்றும் கென் கருணாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Mar 2026 15:44 PM IST

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் கர (Kara) என்ற படமானது தயாராகியிருக்கும் நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்தாக டி55 (D55) மற்றும் டி56 (D56) என அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். இதில் டி55 படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே சென்னையில் தொடங்கியுள்ளது. இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் தனுஷ், இன்று 2026 மார்ச் 13ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்த “யூத்” (Youth) பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அவருடன் இயக்குநர் வெற்றிமாறனுக்கு (Vetrimaaran) கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய நடிகர் தனுஷ், கென் கருணாஸின் (Ken Karunaas) திறமை மற்றும் மன உறுதி குறித்து பேசியுள்ளார். மேலும் யூத் படம் இயக்குவது கென் கருணாஸ் தன்னிடம் கூறியபோது, தான் சொன்ன அட்வைஸ் குறித்தும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!

கென் கருணாஸ் குறித்து வெளிப்படையாக பேசிய தனுஷ் :

நடிகர் தனுஷ் அதில், “கென் கருணாஸ் என்னிடம் யூத் படத்தை எடுக்கப்போகிறேன் என சொன்னதும் எனக்கு ஷாக்கிங்காக இருந்தது. நான் உடனே அவரிடம் ஏன் அவசரப்படுற, இன்னும் 2- 3 வருடம் உதவி இயக்குநராக வேலைபார்த்து, இன்னும் நல்லா படம் எடுக்கலாம் என சொன்னேன். நான் நீ நல்ல எடுக்கமாட்டேனு சொல்லல, இன்னும் கத்துகிட்ட நல்ல படம் எடுக்கலைனு சொன்னே. அவர் என்னிடம், “இல்ல சார் நான் படம் எடுத்துடுவேன்-னு” சொன்னாரு. அவ்வளவு உறுதியாகவும், படம் எடுத்தே தீரவேண்டும் என இருக்கும் ஒருவரிடம் நான் அவரை டிஸ்மோட்டிவேட் பண்ணமுடியாது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய அனுஷ்கா ஷெட்டி.. யாரை திருமணம் செய்கிறார் தெரியுமா?

உடனே நான், ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பிட்டேன். நிஜமாகவே நான் அவர் இப்படி ஒரு படம் எடுப்பாருனு நினைக்கவே இல்லை. ஆனால் நான் நினைத்தது தவறு என கென் நிரூபித்துவிட்டார். முதலில் அசுரன் படத்தின்போது அவரை வேண்டாம் என தப்பான முடிவெடுத்தேனோ, அதுபோல யூத் படம் அவர் இயக்கமாட்டாருனு தவறாக நினைத்துவிட்டேன். ஆனாலும் இது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கென் கருணாஸ் குறித்து நடித்தார் தனுஷ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

கென் கருணாஸ் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள யூத் படம் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதில் பல உச் நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களும் இணைந்து நடித்துள்ளநர். இடத்ன் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us