AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Youth Movie: லவ்.. லவ்…லவ்… கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது!

Youth Movie Trailer: தமிழில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் கென் கருணாஸ் அறிமுகமாகியுள்ள படம்தான் யூத். வித்தியாசமான காதல் மற்றும் எமோஷனல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இதன் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் தற்போது வெளியிட்டுள்ளார்.

Youth Movie: லவ்.. லவ்…லவ்… கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது!
யூத் திரைப்பட டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Mar 2026 21:26 PM IST

தமிழில் தற்போது கநாதனையாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளவர்தான் கென் கருணாஸ் (Ken Karunas). இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் யூத் (Youth). இதே டைட்டிலில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டில் யூத் என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது அதே டைட்டிலை கென் கருணாஸ் தனது புது திரைப்படத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் கென் கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடித்துள்ளனர். அதில் சிறை பட புகழ் நடிகை அனிஷிமா அனில்குமாரும் (Anishma Anilkumar) ஒன்று. மேலும் இவர்களுடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu), தேவதர்ஷினி, ப்ரியனாஷி யாதவ் மற்றும் மீனாக்ஷி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது. அதை முன்னிட்டு இன்று 2026 மார்ச் 07ம் தேதியில், இதன் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் (Silambarasan) வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யூத் பார்ட் 2 தனுஷ் சாரை வெச்சி எடுக்குறேனா?.. எனக்கு அவர பாத்தாலே பயம் – கென் கருணாஸ்!

கென் கருணாஸின் யூத் பட ட்ரெய்லர் குறித்து சிலம்பரசன் பகிர்ந்த பதிவு:

இந்த யூத் திரைப்படமானது, ஒரு 15 வயது மாணவன் ஒருவன், தனது பள்ளி பருவத்திலே காதல் மற்றும் அதனால் எவ்வாறு மனமுடைகிறான் என்பதை மையமாக கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் மிடில்கிளாஸ் குடும்பத்தின் கஷ்டம் குறித்த கதையிலும் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கென் கருணாஸ் இயக்க, பர்வதா என்டேர்டையின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படமானது தமிழ் மொழியில் மட்டும் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் – மனம் திறந்த பிரியங்கா மோகன்!

இப்படத்துடன் ரன்வீர் சிங்கின் துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமே கென் கருணாஸின் யூத் படத்திற்கு வரவேற்புகள் கிடைக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ- புக்கிங்கும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கென் கருணாஸின் உழைப்பிற்கும் சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us