AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyanka Mohan: மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் – மனம் திறந்த பிரியங்கா மோகன்!

Priyanka Mohan About Made In Korea: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் மேட் இன் கொரியா. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரியங்கா மோகன், இப்படத்தின் ஷூட்டிங் சிக்கல்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

Priyanka Mohan: மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் – மனம் திறந்த பிரியங்கா மோகன்!
பிரியங்கா மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Mar 2026 16:16 PM IST

நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் சூர்யா (Suriya) முதல் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் இவர் பவன் கல்யாண் முதல் நானி போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தமிழில் நடிகர் கவினுடன் (Kavin) புது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதை இயக்குநர் கென் ராய்சன் (Ken Royson) இயக்கிவருகிறார். மேலும் பிரியங்கா மோகன் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள புது திரைப்படம்தான் “மேட் இன் கொரியா” (Made In Korea). இதை இயக்குநர் ரா.கார்த்திக் (Raa. Karthik) இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படம் வரும் 2026 மார்ச் 12ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேட் இன் கொரியா படக்குழு கலந்துகொண்டிருந்தது. அதில் நடிகை பிரியங்கா மோகன், இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சிக்கல்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க : விறுவிறுப்பாக நடைபெறும் புருஷன் படத்தின் ஷூட்டிங்… BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!

மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் குறித்து பிரியங்கா மோகன் பேச்சு:

அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரியங்கா மோகன், “மேட் இன் கொரியா பட ஷூட்டிங் கொரியாவில் நடக்கும்போது, நாங்கள் அதிகம் வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டோம். ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது. அங்கு ஒருநாளில் கிட்டத்தட்ட 4 பருவகாலம் வருவதுபோல இருக்கும். காலையில் நல்ல வெயில் அடிக்கும், கொஞ்ச நேரத்தில் இலையுதிர்காலம் மாதிரி இருக்கும், மேலும் அடுத்து கொஞ்ச நேரத்தில் பனி பொழியும்.

இதையும் படிங்க: ரசிகர்களே தயாரா?.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட ட்ரெய்லர்!

இவ்வாறு ஒரு நாளைக்கே 4 சீசன் வருவதுபோல அங்கு இருந்தது. இதனால் ஷூட்டிங் சீக்கிரமாக எடுப்பது மாதிரி அமைந்தது. மேலும் அங்குள்ள மக்கள் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. மேலும் அந்த காலநிலையால் படத்தின் தொடர்ச்சியை ஃபாலோ பண்ணுவதற்கு கஷ்டமாக இருந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த மேட் இன் கொரியா திரைப்படமானது, ஒரு தமிழ் பெண் கொரியா நாட்டிற்கு செல்ல ஆசைப்படுகிறார். மேலும் கொரியா சென்ற் அவர் அங்கு அவரின் ஆசையை நிறைவேற்றினாரா? அல்லது இல்லையா? என்பதே இப்படத்தின் மைய கரு. இது வரும் 2026 மார்ச் 12ம் தேதியில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us