AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Made in Korea Movie: பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ படம் எப்போது ரிலீஸ்? – வெளியான அறிவிப்பு இதோ!

Made in Korea Movie Release Date : தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் பிரியங்கா மோகன். இவர் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள படம் மேட் இன் கொரியா. தற்போது இப்படம் எப்போது ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Made in Korea Movie: பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ படம் எப்போது ரிலீஸ்? – வெளியான அறிவிப்பு இதோ!
மேட் இன் கொரியா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Feb 2026 17:33 PM IST

நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக பிரதர் (Brother) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு (Ravi Mohan) ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து தனுஷின் நிலவுக்கு எம் மேல் என்ன கோபம் என்ற படத்தில் சிறப்பு பாடலில் நடனமாடியிருந்தார். இதையடுத்ததாக நடிகர் பவன் கல்யாணின் “தே கால் ஹிம் ஓஜி” (They Call Him OG) என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதை அடுத்து ஒரு வருடத்திற்கும் மேல் இந்தத் தமிழ் படங்களிலும் இவர் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது கவினுக்கு (Kavin) ஜோடியாக புது படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது முற்றிலும் காமெடி பொழுதுபோக்கு படமாக தயாராகிவருகிறதாம்.

இந்த தமிழ் படங்களின் வரிசையில், நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடித்திருக்கும் புது படம்தான் “மேட் இன் கொரியா” (Made In Korea). இப்படத்தை இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியுள்ள நிலையில், இது நேரடியாக ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்து.

இதையும் படிங்க: மணிரத்னம் உடனான படத்தை உறுதி செய்த நடிகர் விஜய் சேதுபதி

மேட் இன் கொரியா திரைப்படத்தின் ரிலீஸ்:

இந்த் மேட் இன் கொரியா திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் முன்னணி கதாநாயகியாக நடிக்கும் நிலையில், அவருடன் கொரியா நடிகர்கள் பார்க் ஹை-ஜின் மற்றும் ஜேஹ்யுன் ஜாங் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: ‘சேயோன்’ எனும் ஒரு மூட்டை விதை.. கண்டிப்பா பெரிய விளைச்சலை காட்டுவேன் – எமோஷனலாக பேசிய சேயோன் பட இயக்குநர்!

இப்படமானது தமிழகத்தில் வாழும் பெண் ஒருவர், கொரியாவிற்கு சென்று வேலைபார்ப்பதற்கு ஆசை படுகிறார். அப்படி கொரியாவிற்கு சென்ற கதாநாயகி அங்கு அவர் ஆசைப்பட்டதுபோல இருந்தாரா?, மீண்டும் இந்தியா திருப்பினாரா? என்பதுதான் கதை. இப்படமானது வரும் 2026 மார்ச் 12ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாம். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளதாம். தற்போது இதன் ரிலீஸ் தேதி மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில், ஓடிடியில் நிச்சயமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பதிவு: