AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘சேயோன்’ எனும் ஒரு மூட்டை விதை.. கண்டிப்பா பெரிய விளைச்சலை காட்டுவேன் – எமோஷனலாக பேசிய சேயோன் பட இயக்குநர்!

Sivakumar Murugesan Emotional Speech: தமிழில் தாய் கிழவி என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இவரின் இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியாகிறது. மேலும் இவர் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தையே இயக்கவுள்ள நிலையில், அந்த படம் குறித்து மற்றும் சிவகார்த்திகேயன் குறித்தும் எமோஷனலாக பேசியுள்ளார்.

‘சேயோன்’ எனும் ஒரு மூட்டை விதை.. கண்டிப்பா பெரிய விளைச்சலை காட்டுவேன் – எமோஷனலாக பேசிய சேயோன் பட இயக்குநர்!
சிவகுமார் முருகேசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Feb 2026 15:50 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் தயாரிப்பில் ஆண்டிற்கு ஒரு படமாவது வெளியாகிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் தயாராகியுள்ள படம்தான் தாய் கிழவி (Thaai kizhavi). இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியுள்ளார். இந்த தாய் கிழவி திரைப்படமானது மிகவும் வித்தியாசமான கிராமப்புற கதைக்களத்தில் திறக்கியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) லீட் நாயகியாக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. முற்றிலும் பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்துடன் இப்படம் தயாராகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் சூரி முதல் ஸ்ரீ பிரியா போன்ற பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய இயக்குநர் சிவகுமார் முருகேசன் எமோஷனலாக பேசியினார். அதில் சிவகார்திகேயன் மற்றும் சேயோன் (Seyon) படம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்… ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் குறித்து மேடையில் எமோஷனலாக பேசிய இயக்குனர் சிவகுமார் முருகேசன் :

அந்த ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய சிவகுமார் முருகேசன், “கடுமையான பசியில் இருப்பவனுக்கு ஒரு கைப்பிடி கஞ்சு கிடைத்தாலே போதும் உயிர் பிழைத்துவிடும். ஆனால் எனக்கு சிவகார்த்திகேயன் சார் அமர வைத்து தாய் கிழவி என்னும் ராஜ விருந்தையை பிடித்துவிட்டார்.

இதையும் படிங்க: வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அரசன் படத்திலும் உள்ளனர் – சமுத்திரக்கனி கொடுத்த சூப்பர் அப்டேட்

அதனால் எனது மனசும் வயிறும் நிறைந்திருக்கும் போதே, சேயோன் எனும் ஒரு மூட்டை நெல்லை என் கையில் கொடுத்துவிட்டார். கண்டிப்பாக நான் பெரிய விளைச்சலை காட்டுவேன்” என அந்த நிகழ்ச்சி மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.

தாய் கிழவி திரைப்படத்தில் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த தாய் கிழவி படத்தில் ராதிகா சரத்குமார், பவுனுதாயி என்ற கிழவி வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் இளவரசு, பாலா சரவணன், சிங்கம்புலி, முனீஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது.