வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அரசன் படத்திலும் உள்ளனர் – சமுத்திரக்கனி கொடுத்த சூப்பர் அப்டேட்
Samuthirakani Recent Interview About Arasan Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கல் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் சமுத்திரக்கனி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வருகிறார். தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி படங்களில் நடிக்கவும் செய்து வருகிறார். தற்போது படங்களை இயக்குவதைக் குறைத்துக்கொண்ட சமுத்திரக்கனி அதிக அளவில் நடித்து வருகிறார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் தமிழ் சினிமாவில் மட்டும் தான் கதையின் நாயகன், சிற்ப்பு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளில் பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்திலேயே நடிகர் சமுத்திரக்கனி அதிக அளவில் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் தி ராஜா சாப் படம் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதில் பிரபாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.




வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அரசன் படத்தில் உள்ளனர்:
இந்த நிலையில் சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, குணா, செந்தி, ராஜன், சந்திரா என வட சென்னை படத்தில் வரும் மூவரும் இந்த அரசன் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். சிலம்பரசன் டி.ஆருக்கும் தனுஷுக்கும் இடையேயான காம்பினேஷன் பற்றி எனக்குத் தெரியவில்லை.
மேலும் வெற்றிமாறன் கதையைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அது முற்றிலும் வித்தியாசமாக உணர்கிறது. திரையில் ஒரு சிறப்பான மாயாஜாலம் இருக்கும், ஏனென்றால் ஸ்கிரிப்ட் அவ்வளவு சக்தி வாய்ந்தது. படத்திற்கு மிகுந்த கடின உழைப்பு தேவை. இது ஒரு மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… ‘கைதி 2’ பட புது டைட்டில் இதுவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!
இணையத்தில் வைரலாகும் சமுத்திரக்கனி பேச்சு:
#Samuthirakani about #Arasan
– Guna, Senthil, and Rasigan are all in Arasan. None of them know about the #SilambarasanTR and #Dhanush face-off.
– But Vetrimaaran told me that you are in the film. When I asked about Guna, Senthil, and Chandra, he said yes, they are all part of… pic.twitter.com/d9h8OOYgIO
— Movie Tamil (@_MovieTamil) February 24, 2026
Also Read… கமல் ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்து பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா