‘கைதி 2’ பட புது டைட்டில் இதுவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!
Kaithi 2 Movie New Title Update: கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணி வெளியானபடம் கைதி. கடந்த 2019ம் ஆண்டில் வெளியா இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், கைதி 2 படமானது தயாராகவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் புது டைட்டில் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகனாக படங்களில் நடிப்பவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வா வாத்தியார் (Vaa Vaathiyaar) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியான இப்படம் எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை அடுத்ததாக தற்போது கார்த்தி, இயக்குநர் தமிழ் (Tamizh) இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு முன்னே இவரின் நடிப்பில் சர்தார் 2 (Sardar 2) படமானது தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் கார்த்தியின் நடிப்பில், வா வாத்தியார் படத்திற்கு பின், கிட்டத்தட்ட 2 படங்கள் இன்னும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில் வெளியான படம்தான் கைதி (Kaithi). இப்படமானது இருவருக்குமே எதிர்பாராத சூப்பர் ஹிட் வரவேற்பைக் கொடுத்திருந்தது.
இப்படத்தை அடுத்ததாக கைதி 2 (Kaithi 2) படமானது தயாராகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேலும் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூனுடன் புது படத்தில் இணைந்துவிட்டார். இந்நிலையில் கைதி 2 படமானது கைவிடப்பட்டதா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ பட ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்!
கைதி 2 படத்தின் டைட்டில் அப்டேட் :
கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்திற்கு படக்குழு புது டைட்டிலை வைத்துள்ளதாம். இப்படத்திற்கு படக்குழு “டில்லி” என டைட்டிலை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி கைதி படத்தில், டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அதன் பெயரையே கைதி 2 படத்தின் டைட்டிலாக படக்குழு வைக்க முடிவு செய்துள்ளது. இப்படமும் LCU யுனிவர்ஸ் திரைப்படமாக தயாராகவுள்ள நிலையில், மக்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் கைதி திரைப்படத்தை தயாரித்த, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் டில்லி என்றடைட்டிலில் டீசர் ஒன்றிற்கு சென்சார் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் வெளியாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி? ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்
இது கார்த்தியின் கைதி 2 படமாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 30 நொடிகளை கொண்ட டீசருக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைதி 2 படத்தின் டீச்சராக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த டீசர் வரும் 2026 மார்ச் 14ம் தேதியில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் வெளியாகி அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைதி 2 திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
#Kaithi2 Official announcement expected on March 14th 2026, #LokeshKanagaraj birthday special ✨️
– The film is tentatively titled #Dilli, and the team has already censored the teaser 🎬#AA23 pic.twitter.com/2ZlsmpLTci
— Movie Tamil (@_MovieTamil) February 23, 2026