Karthi: கைதி 2 படத்தின் நிலைமை என்ன? கார்த்தி கொடுத்த ஷாக் பதில் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Karthi About Kaithi 2: தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகிவருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம்தான் கைதி 2. இப்படம் குறித்து கார்த்தி சொன்ன பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கார்த்தி (Karthi) சிறந்த நடிகர்களாகில் ஒருவராக திகழ்க்கிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ல் எந்த படங்களும் வெளியாகாத நிலையில், இந்த 2026ம் ஆண்டில் முதல் திரைப்படமாக வெளியாகியிருப்பதுதான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படமானது எம்.ஜி.ஆர் (MGR) என்ற பிம்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumarasamy) இயக்கியிருந்த நிலையில், கார்த்தி மற்றும் க்ரித்தி ஷெட்டி இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களை சந்திக்க சென்ற கார்த்தி, அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கைதி பார்ட் 2 (kaithi 2) பாடம் பற்றி கேள்வியை எழுப்பியிருந்தனர். அது குறித்து கார்த்தி சொன்ன பதில் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஓடிடி ரிலீஸ் எப்போது? அட இத்தனை வாரங்களுக்கு பிறகா?
கைதி 2 படம் குறித்து கார்த்தி சொன்ன ஷாக் தகவல் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் கார்த்தியிடம், “லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்கிறார், அப்போது கைதி 2 படத்தின் நிலைமை என்ன ?” என கேட்டிருந்தார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கார்த்தி “அதனை அவரே சொல்வார்” என கூறினார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை கைதி 2 படம் கைவிட்டதா? என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
வா வாத்தியார் படம் குறித்து கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Dearest Friends and Family! Thank you for all your best wishes and prayers! #VaaVaathiyaar in theatres from today!💥💥 #NalanKumarasamy @Music_Santhosh @StudioGreen2 @gnanavelraja007 @IamKrithiShetty @george_dop @thinkmusicindia @PrimeVideoIN pic.twitter.com/KdFAAZijaH
— Karthi (@Karthi_Offl) January 14, 2026
அல்லு அர்ஜூனுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் :
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை அடுத்தாக டிசி என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவதாக அவர் கூறியிருந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தமிழிலிருந்து தெலுங்கு சினிமாவை நோக்கி லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: துபாய் கார் ரேஸ் களத்தில் அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!
அல்லு அர்ஜுனின் இப்படம் AA23 என அழைக்கப்படுகிறது. இப்படமும் லோகேஷின் LCU-வில் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.