பிரபல நடிகரின் தம்பி.. இந்த புகைப்படத்தின் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?
Tamil Celebrity Photos: தென்னிந்திய நடிகர்கள் தற்போது தங்களின் மொழியை தவிர மற்றமொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் (Tamil Cinema) நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தந்தை நடிகராக இருந்து பின் மகனும் நடிகராக அறிமுகமாகி பல சாதனை படைத்த நடிகர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறப்பான படங்களை கொடுத்துவரும் பிரபல நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் தந்தையும் ஒரு பிரபல தமிழ் நடிகர்தான். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வெளியான படங்களில் முருகன், பெருமாள் மற்றும் சிவன் வேடம் என்றால் இவருக்குத்தான் மவுசு அதிகம் என கூறலாம். மேலும் இவருக்கு இரு மகன்கள் உண்டு, அந்த இருவருமே தமிழ் நடிகர்கள்தான். அந்த இரு மகன்களில் 2வது மகன்தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன். இவரின் அண்ணன் கிட்டத்தட்ட 44 படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துவருகிறார்.
இப்போதாவது மேலே இருக்கும் சிறுவன் யாருனு தெரிகிறதா?. இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் (MGR) கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அட இந்த சிறுவன் வேறுயாருமில்லை நடிகர் கார்த்தி தான் (Karthi).




இதையும் படிங்க: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் படம் குறித்த எக்ஸ் பதிவு :
Dearest Friends and Family! Thank you for all your best wishes and prayers! #VaaVaathiyaar in theatres from today!💥💥 #NalanKumarasamy @Music_Santhosh @StudioGreen2 @gnanavelraja007 @IamKrithiShetty @george_dop @thinkmusicindia @PrimeVideoIN pic.twitter.com/KdFAAZijaH
— Karthi (@Karthi_Offl) January 14, 2026
நடிகர் கார்த்தியின் சினிமா வாழ்கை :
நடிகர் கார்த்தி கடந்த 1977ம் ஆண்டு மே 25ம் தேதியில், நடிகர் சிவகுமாருக்கு மற்றும் லட்சமி சிவகுமாருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது ஆர்வம் இருந்த நிலையில், ஆரம்பத்தில் கோலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைந்தார். இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து என்ற படத்தில் உதவி இயக்குநராக கார்த்தி பணியாற்றியுள்ளார். மேலும் இயங்குவதையும் தாண்டி நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. இயக்குநரும், நடிகருமான அமீரின் இயக்கத்தில் கடந்த 2007ல் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வெளியானது. பின் தனது அண்ணன் சூர்யாவிற்கு இணையாகவும் படங்களில் நடிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: விஜய் அண்ணாவின் ரசிகனாக அவரின் வெற்றிக்கு எப்போதும் பிரார்த்திக்கிறேன் – ரவி மோகன் பேச்சு!
ஆரம்ப கட்டத்தில் இவரின் படங்களுக்கு அந்தளவிற்கு வரவேற்பு இல்லை, இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்த படம்தான் சிறுத்தை. இப்படத்தை அடுத்ததாக மாஸ் ஆக்ஷ்ன் மற்றும் காமெடி ஜானர் கொண்ட படங்களில் நடிக்க தொடங்கினர். மேலும் இவர் தற்போது தமிழ் சினிமாவைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வா வாத்தியார் என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பை பெற்றுவருகிறது.