Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?

Tamil Actor Childhood Photo: சினிமாவில் பொதுவாக நடிகர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த வகையில், நடிகர்கள் அடுத்தகட்டத்துக்கு முன்னேற அவர்களுக்கு முன் இருக்கும் நடிகர்களின் இடங்களை தட்டிப்பறிகின்றனர். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயாகின யார் என்பது குறித்து பார்க்கலாம்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?
தமிழ் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 08:22 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற நடிகர்கள் தற்போதுவரையிலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்துவருகின்றன. அந்த வகையில் அவர்களின் முடி முதல் அடி வரை அவர்களின் ரசிகர்களுக்கு தெரியும். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருவது உண்டு. அந்த விடத்த்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள நடிகர் நார் என தெரிகிறதா?. சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது ஆசை இல்லமா? சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர். தொகுப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி, தனது நகைச்சுவை மற்றும் டைமிங் பேச்சு போன்றவற்றினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் குறும்படத்தில் நடித்துவந்த இவர், இயக்குநர் பாண்டிராஜின் (Paandiraj) இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் சில படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழ் மக்களிடையே ஹிட் கொடுத்த படத்தை இயக்கியவர்தான் பொன்ராம் (Ponram). ஆரம்பத்தில் நகைத்துவை படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த இவர் தற்போது ஆக்ஷன் படங்களில் தளபதி விஜய்யின் இடத்திற்கு முன்னேறவேண்டும் என நினைக்கும் நடிகர்தான் இந்த சிறுவன். இப்போதான் யார் என தெரிகிறதா? அட இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் நடிகர் சிவகார்திகேயன்தான் (Sivakarthikeyan).

இதையும் படிங்க: சினிமாவில் தளபதி விஜயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

தொகுப்பாளர் டூ கதநாயகனாக சிவகார்த்திகேயன் :

நடிகர் சிவகார்த்திகேயன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், இவரின் தந்தை போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவந்தவர். மேலும் தந்தையில் இழப்பிற்கு பின் தாய் மாமனின் அரவணைப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன். பின் தாய் மாமனின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர் ஆரம்பத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, டான்ஸ் போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவர் இயக்குநர் அட்லீ இயக்கிய குறும்படத்தின் மூலமாக நடிப்பை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க: சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் இவர்கள்தான் – வெங்கட் பிரபு உடைத்த உண்மை!

மேலும் இயக்குநர் பாண்டிராஜின் மெரினா என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தார். இது அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. பின் தனுஷின் 3 படத்தில் துணை வேடத்தில் நடித்திருந்தார். இதை அடுத்தாக தனுஷின் தயாரிப்பில் பல படங்களில் கதாநாயகனாகவே நடித்திருந்தார். இந்த் வரிசையில் இவருக்கு மக்களிடையே பிரபலத்தை கொடுத்த படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர் காமெடி படங்ககளில் நடித்துவந்தார். அந்த வகையில் தற்போது அதிரடி ஆக்ஷன் படங்களை உச்ச நடிகர்களை போல தேர்வுசெய்துவருகிறார். அதில் இவருக்கு வெற்றியை கொடுத்த படம் அமரன். மேலும் பராசக்தி என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.