Venkat Prabhu: சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் இவர்கள்தான் – வெங்கட் பிரபு உடைத்த உண்மை!
Venkat Prabhu About Simbus Favorite Actresses: தமிழில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் பல படங்ககள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் முன்னதாக ஒரு நேர்காணலில் சிலம்பரசனுடன் இவர் கலந்துகொண்டிருந்தார். அதில் சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் யார் என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் தமிழில் தொடர்ந்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இவரின் படங்கள் என்றால் நிச்சயம் காமெடி, ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான சென்னை 600 028 (Chennai 600028) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார் வெங்கட் பிரபு. இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே, தொடர்ந்து சரோஜா, கோவா, மங்கத்தா போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் அவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்திருந்தது. இந்த படங்களை அடுத்ததாக சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துவந்தார். அந்த வகையில் இவர் சிலம்பரசனை (Silambarasan) வைத்து மாநாடு (Manaadu) மற்றும் தளபதி விஜய்யை வைத்து தி கோட் (The GOAT) போன்ற படங்களை இயக்கி சமீபத்தில் ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த படங்களை அடுத்ததாக மேலும் சிவகார்த்திகேயனுடனும் புது படம் ஒன்றில் இணைந்துள்ளார். அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் சிலம்பரசனுடன் கலந்துகொண்டார் வெங்கட் பிரபு. அதில் சிலம்பரசனுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் யார் என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!
சிலம்பரசனுக்கு பிடித்த நடிகைகள் குறித்து பேசிய வெங்கட் பிரபு :
அதில் பேசிய வெங்கட் பிரபு, “சிலம்பரசனுக்கு எப்போவுமே அனுஷ்கா தான் மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார். மேலும் எனக்கு விண்ணைத் தண்டி வருவாயா பட ஜோடி ரொம்பவே பிடிக்கும். எனக்கும் பிடித்த ஜோடி காமினேஷன் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தத்தான் சொல்லுவேன். மேலும் சிலம்பரசன் அனுஷ்காவுடன் ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் வானம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும் அனுஷ்காவுக்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வரும்.
இதையும் படிங்க: மங்காத்தாடா… அஜித் குமாரின் மங்காத்தா படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சிலம்பரசன் எப்போதுமே வாழ்த்து சொல்லும்போது, அனுஷ்கா மற்றும் எனக்கும் ஒரே பதிவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார். முன்பு ட்விட்டரில் அப்படித்தானே வாழ்த்துக்களை சிலம்பரசன் பதிவிடுவார். அதனால அனுஷ்கா மற்றும் திரிஷா இருவரும் சிலம்பரசனுக்கு பிடிக்கும். எனக்கு அனுஷ்காவை ரொம்பவே பிடிக்கும்” என அதில் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
சிலம்பரசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
நடிகர் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.