AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழில் சாதனை செய்த டாக்சிக் படம்.. விநோயாக தொகை மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Yashs Toxic Movie: கன்னட நடிகராக இருந்து பாண் இந்திய ரசிகர்களை வைத்திருப்பவர்தான் யாஷ். இவரின் நடிப்பில் தயாராகியுள்ள டாக்சிக் படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இதன் தமிழக ரிலீஸ் உரிமை விற்கப்பட்ட நிலையில், இதன் பட்ஜெட் குறித்த தகவல்கள் வைரலைவருகிறது.

தமிழில் சாதனை செய்த டாக்சிக் படம்.. விநோயாக தொகை மொத்தம் எவ்வளவு தெரியுமா?
டாக்ஸிக் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 18:18 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக இருப்பவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியா வரையில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த திரைப்படம் கேஜிஎஃப் (KGF). இப்படத்தின் மூலமாக இவர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அந்த வகையில் கேஜிஎஃப் பார்ட் 2 படமும் வெளியாகி இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படமானது சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட ரூ 600 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம்தான் டாக்சிக் : ஏ ஃபரி டேல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown Ups). இப்படத்தில் நடிகர் யாஷ், ரயா மற்றும் டிக்கெட் என இரு வேடங்களில் நடித்துள்ளார். முற்றிலும் ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதன் பான் இந்திய ரிலீஸ் விநியோகம் விற்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை 4 நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இப்படமானது எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா?. இப்படமானது சுமார் ரூ 63 கோடியில் தமிழக விநியோககர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதுவரை தமிழ் மொழி படங்களை தவிர மற்றமொழி திரைப்படங்கள் இத்தனை கோடிகளுக்கு தமிழ் ரிலீஸ் உரிமையாக விற்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யூத் படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல் – நெகிழ்ந்து பேசிய கென் கருணாஸ்

டாக்சிக் பட தமிழக ரிலீஸ் உரிமை குறித்து படக்குழு வெளியிட பதிவு:

யாஷின் இந்த டாக்சிக் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை திங்க் ஸ்டுடியோஸ், ஒயிட் நைட்ஸ், 5 ஸ்டார் கே செந்தில், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் எஸ் பிக்சர் போன்ற நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளதாம். இந்த ரிலீஸ் உரிமையாக மொத்தமாக ரூ 63 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்

டாக்சிக் படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது. இப்படம் உலகமெங்கும் கிட்டத்தட்ட 7 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் யாஷுடன் நடிகர்கள் டோவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி 2026 மார்ச் 12ம் தேதிக்கும் மேல் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us