AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள இயக்குநருடன் புது படத்தில் இணையும் சியான் விக்ரம் – ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்!

Chiyaan Vikram New Movie Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அறிமுக இயக்குநருடன் சியான் 63 படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் இதையடுத்து இவர் பிரபல மலையாள இயக்குநருடன் படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநருடன் புது படத்தில் இணையும் சியான் விக்ரம் – ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்!
சியான் விக்ரம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 15:50 PM IST

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவந்த இப்படத்தை இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கியிருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து புது படங்களின் கதையை கேட்டுவந்த சியான் விக்ரம், தனது புது படங்களின் இயக்குநர்கள் யார் யார் என்பதை முடிவு செய்துள்ளாராம். அந்த வகையில் தற்போது இவர் அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் (Bodi K Rajkumar) இயக்கத்தில் சியான்63 (Chiyaan 63) என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அடுத்தாக மலையாள இயக்குநர் ஒருவரின் படத்தில் விக்ரம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் வேறுயாருமில்லை, டோவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ஜித்தின் லால் தான் (Jithin Lal).

இதையும் படிங்க: அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்

மலையாள இயக்குநருடன் விக்ரம் புது படம் குறித்த பதிவு:

கடந்த 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஏ.ஆர்.எம். இப்படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் க்ரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது 2024ம் ஆண்டில் டோவினோ தாமஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தின் மூலம் இயக்குநராக தென்னிந்திய முழுவதும் பிரபலமானவர் தான் இயக்குநர் ஜித்தின் லால். இவர் இதுவரை 2 படங்கள் மட்டுமே இயக்கியிருந்த நிலையில், தற்போது தனது 3வது படத்தில் சியான் விக்ரமுடன் இணைவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்

இப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகுவதாக கூறப்படுகிறது. இப்படமானது விகாரமின் சியான் 64 அல்லது 65வது திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் தற்போது அடுத்தடுத்து கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேலாக நடிகர் சியான் விக்ரம் தனது கைவசத்தில் படங்கள் வைத்திருபதாஹ்க் கூறப்படும் நிலையில், இந்த கூட்டணியும் அதில் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us