AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்… உற்சாகத்தில் ரசிகர்கள்

Pradeep Ranganathan to launch an official production house: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்ததாக ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்… உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரதீப் ரங்கநாதன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Feb 2026 14:27 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக படங்களை இயக்கி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் கடந்த சில ஆண்டுகளாக நாயகனாக படங்களில் நடித்து கலக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலமாக பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கியப் படம் லவ் டுடே. 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாகவும் நடித்து இருந்தார். இவர் நாயகனாக அறிமுகமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனை ரசிகர்கள் நாயகனாகவும் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படங்களும் வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளார். அதன்படி பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதலாவதாக நடிகை மமிதா பைஜூவை வைத்து படம் தயாரிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தில் மமிதா பைஜூ முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மணிரத்னம் உடனான படத்தை உறுதி செய்த நடிகர் விஜய் சேதுபதி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ‘சேயோன்’ எனும் ஒரு மூட்டை விதை.. கண்டிப்பா பெரிய விளைச்சலை காட்டுவேன் – எமோஷனலாக பேசிய சேயோன் பட இயக்குநர்!