முதலமைச்சர் விஜயின் வீடியோவை முதல்வன் பட காட்சியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!
Chief Minister Vijay walking video | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள தளபதி விஜயின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் முதல்வன் பட கட்சியுடன் ஒப்பிட்டு வருவது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாறி நாட்டை ஆட்சி செய்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் தளபதி விஜயும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் உச்ச நடிகராக வலம் வந்த தளபதி விஜய் தனது சினிமா வாழ்க்கையை உச்சத்தில் கொண்டு வைத்த தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய பிறகு நடைப்பெற்ற முதல் சட்டமன்ற தேர்தலான இந்த 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் பதவி ஏற்றார். தமிழ் நாட்டை பொறுத்தவரை முன்பு எப்போதும் மக்களிடையே இல்லாத அரசியல் ஆர்வம் விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே தமிழ் நாட்டு மக்களிடையே அரசியல் பேசும் பழக்கமும் அதிகரித்து. தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகள் குறித்தும் அதிக அளவில் பேசி வருகின்றனர். முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளும் மக்களால் அதிக அளவில் கவணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.




முதல்வன் பட காட்சியை ரீ-கிரியேட் செய்த முதலமைச்சர் விஜய்:
இப்படி ஒரு பக்கம் அவரது அரசியல் குறித்த நிகழ்வுகள் அதிக அளவில் பேசப்பட்டு வருவது போல முதலமைச்சரின் ஸ்டைல் மற்றும் நடவடிக்கைகளை படங்களுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அப்படி ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் வெளியான முதல்வன் என்ற படத்தை வைத்து ஒப்பிட்டு பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்த முதல்வன் என்ற படத்தில் சட்டமன்றத்தில் இருந்து முதலமைச்சராக இருக்கும் அர்ஜுன் நடந்து வரும் காட்சியையும் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜய் நடந்து வரும் காட்சியையும் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் நிஜ வாழ்க்கையில் அவற்றை உருவாக்குவதற்காகவே விஜய் முதல்வன் திரைப்படத்தின் திரைக்கதையை நிராகரித்தார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியில் புது மாற்றம்… வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
He rejected the mudhalvan script just to create them in real life🔥 pic.twitter.com/6ckC9whf3D
— VɪᴊᴀʏɪꜱM ツ (@VijayismX) July 15, 2026
Also Read… விமான நிலையத்தில் ரசிகர் கொடுத்த விபூதி… ரஜினிகாந்த் செய்த கியூட் சம்பவம்!