Basil Joseph: அதற்காகவே ஜன நாயகன் படத்தை பார்ப்பேன் – நடிகர் பேசில் ஜோசப் பேச்சு!
Basil Joseph About Jana Nayagan Movie: மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் பேசில் ஜோசப். இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஜன நாயகன் படத்தை பார்க்க தனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான மலையாள நடிகராக இருந்துவருபவர் பேசில் ஜோசப் (Basil Joseph). இவர் இயக்குநராகவும், நடிகராகவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் மின்னல் முரளி (Minnal Murali). 2021ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் டோவினோ தாமஸ் (Tovino Thomas) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின் கிட்டத்தட்ட 4 வருடங்களாக நடிகராக படங்களில் பணியாற்றிவருகிறார். மேலும் தமிழில் இவர் ,சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
மேலும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பாசில் ஜோசப், ஜன நாயகன் (Jana Nayagan Movie) படத்தை பார்ப்பதற்கு தனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!
ஜன நாயகன் படம் குறித்து நடிகர் பேசில் ஜோசப் பேசிய விஷயம்:
அண்மையில் பேட்டியில் பேசிய பேசில் ஜோசப், “ஜன நாயகன் படத்தில், முதல்வர் விஜய் என்ற டைட்டில் கார்டை பார்ப்பதற்காகவே, அந்த படத்தை திரையரங்கில் கண்டிப்பாக பார்க்கப் போகிறேன்” என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது தமிழக முதல்வராக தளபதி விஜய் பணியாற்றிவரும் நிலையில், இவர் சினிமாவில் நடித்த கடைசி படம்தான் ஜன நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
See you soon in theatres nanba & nanbis ❤️#JanaNayaganCensoredA 💥
Hon’ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries@PharsFilm @PicturesPVR @kamalgianc… pic.twitter.com/Rcx4Iuw52P
— KVN Productions (@KvnProductions) July 11, 2026
ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்:
தமிழக முதலமைச்சர் விஜய் நடித்திருந்த கடைசி படம்தான் ஜன நாயகன். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவேண்டிய இப்படம், சென்சார் சான்றிதழ் பிரச்சனையின் காரணமாக வெளியாகாமல் இருந்தது.
இதையும் படிங்க: தனுஷின் தமிழ் முருகன் பட கதை இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
கிட்டத்தட்ட 7 மாதங்ககுக்கும் மேலான நிலையில், தற்போதுதான் தணிக்கை குழு “ஏ” தரச் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறதாம். இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், புது ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.