அப்போ ஜன நாயகன் படத்தை இந்த வயதினர் மட்டும் தான் பார்க்க முடியுமா? வெளியானது சென்சார் அப்டேட்
Censor Board has given an A certificate to Thalapathy Vijays film Jana Nayagan | தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு அதிகாரப்பூர்வ சான்றிதழை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 6 மாதங்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, ரேவதி, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், நாசர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மேலும் கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரித்து உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதால பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் பல தடைகளைத் தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாக தயராகி உள்ளது.




ஜன நாயகன் படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்?
இந்த ஜன நாயகன் படம் ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பிறகு ஜன நாயகன் படத்திற்கு இறுதியாக தணிக்கை குழு சான்றிதழை வழங்கியுள்ளது. அதன்படி ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு தற்போது ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… இயக்குநர் சுதா கொங்கரா வழக்கில் எதிர்பாராத திருப்பம்.. இதயம் முரளி படத்திற்கு தடையில்லை!
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
See you soon in theatres nanba & nanbis ❤️#JanaNayaganCensoredA 💥
Hon’ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries@PharsFilm @PicturesPVR @kamalgianc… pic.twitter.com/Rcx4Iuw52P
— KVN Productions (@KvnProductions) July 11, 2026
Also Read… Santhosh Narayanan: அரசன் படத்தில் இசையமைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!