DQ41: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
Dulquer Salmaans DQ41: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் தெலுங்கில் உருவாகிவரும் புது படம்தான் DQ41. இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலையாளம் சினிமாவின் மூலம் நாயகனாக நுழைந்து, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும், தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான லோகா (Lokah) என்ற படமானது தென்னிந்திய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாகியிருந்தது. அந்த வரிசையில் தற்போது நாயகனாகவும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் துல்கர் சல்மான். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கு பின் தெலுங்கில் நடித்துவரும் புது படம்தான் DQ41. இப்படத்தை தற்காலிகமாக DQ41 என அழைக்க, இதை இயக்குநர் ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi) இயக்கிவருகிறார்.
ஸ்பெஷலான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கோலிவுட் மோனிகா நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
துல்கர் சல்மானின் DQ41 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:
இந்த படமானது சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இதன் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில், காலை 10: 08 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் காதல், பீல் குட் கதியில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்புகளை அதிகமாகிவருகிறது.
DQ41 படத்தின் டைட்டில் முதல் பார்வை குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
#LoveWillSparkAgain 💕#DQ41 title and first look out tomorrow at 10.08 AM ❤️#SLVC10
Starring @dulQuer, @hegdepooja & @Dheekshiths
Directed by @ravinelakuditi9
Music by @gvprakash
Cinematography by #AnayOmGoswamy
Editing by #KotagiriVenkateswaraRao
Production design by… pic.twitter.com/gIeObxrRZq— SLV Cinemas (@SLVCinemasOffl) July 9, 2026
இப்படத்தில் துல்கார் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டேவுடன், தி கேர்ள்பிரண்ட் படத்தின் நடித்திருந்த நடிகர் தீட்சித் ஷெட்டி இணைந்து நடித்துவருகிறார். இதில் அவர் நெகட்டிவ் சார்ந்த வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வைரலாகும் பதிவு
இந்த DQ41 படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இப்படத்தை 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.