AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

I Nobody movie synopsis | மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஐ நோபடி. இந்தப் படத்தின் கதை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
ஐ நோபடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 15:43 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி இயக்குநராகவும், பாடகராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் அடுத்ததாக மலையாள சினிமாவில் வெளியாக உள்ள ஐ நோபடி. இந்தப் படம் நாளை 09-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நிஷாம் பஷீர் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதை என்ன என்பது குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி படத்தின் கதை இதுதானா?

நெரிசல் மிகுந்த ஒரு நகரத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களில் ராஜீவனும் ஒருவர். ஒரு அரசு ஊழியராகவும், கணவராகவும், இரு குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கும் அவரிடம் தனித்துச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தச் சிறப்பம்சமும் இல்லை. யாருடைய கவனத்தையும் ஈர்க்காத, சாதாரணமான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். ஆனால், ஒரு சாதாரண நாளில், அவர் பார்க்கக்கூடாத ஒரு விஷயத்தைக் காண நேரிடுகிறது.

அதிர்ச்சியுடன் தொடங்கும் அந்த நிகழ்வு, மெல்ல மெல்ல ஒரு குழப்பமான சூழலாக மாறி, அவரது வாழ்க்கையையே சீர்குலைக்கத் தொடங்குகிறது. சூழ்நிலைகள் மாறுகின்றன; மனிதர்களின் போக்கும் மாறுகிறது. என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்வதற்கு முன்பே, ராஜீவன் வெறும் ஒரு சாட்சியாக மட்டும் இல்லாமல், ஒரு தீவிரமான குற்றச் செயலின் மையப்புள்ளிக்கு இழுக்கப்படுகிறார்.

Also Read… Mamitha Baiju: சோஷியல் மீடியாவிலிருந்து ஸ்மால் பிரேக் எடுப்பதாக அறிவித்த மமிதா பைஜூ!

அவரது தரப்பு நியாயத்தைக் கேட்க மறுக்கும் அமைப்பால் அவர் ஒரு குழப்பவாதியாக முத்திரை குத்தப்படுகிறார்; தன்னைப்பாதுகாக்க வேண்டிய அமைப்புகளாலேயே அவர் வேட்டையாடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவருக்குள்ள வாய்ப்புகள் குறைகின்றன, கையில் இருக்கும் நேரமும் மிகக் குறைவாகவே உள்ளது. குடும்பம் ஆபத்தில் சிக்கியிருக்கும் நிலையில், உதவிக்கு வேறு யாரும் இல்லாத சூழலில், ராஜீவனுக்கு ஒரே ஒரு வழிதான் எஞ்சியிருக்கிறது: அதற்கான தயார்நிலை இல்லையென்றாலும், அந்தச் சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Also Read… இணையத்த்தில் வைரலாகும் அர்ஜுன் தாஸின் சூப்பர் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Follow Us