இணையத்த்தில் வைரலாகும் அர்ஜுன் தாஸின் சூப்பர் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Actor Arjun Das Next Movie Update | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், வில்லனாகவும் மாறிமாறி நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் கான் சிட்டி. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த கான் சிட்டி படத்தைப் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் போது படம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் மிகவும் வித்யாசமான கதையில் இந்தப் படம் அமைந்து இருப்பதாகவும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது என்றும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸின் அடுத்தப் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அர்ஜுன் தாஸின் சூப்பர் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் எழுதி இயக்கி உள்ள படம் சூப்பர் ஹீரோ. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் தேஜு அஸ்வின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு சூப்பர் ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Here’s to a story that celebrates the hero in all of us. 🦸✨
Wishing @SoldiersFactory @sinish_s @iam_arjundas @iamSandy_Off @shanicucic96 @storiesbyvicky &
the entire team of #SuperHero a grand success!Best Wishes from Team #StudioGreen @teju_ashwini @HeshamAWmusic pic.twitter.com/9UcpqxjaV2
— Studio Green (@StudioGreen2) July 6, 2026
Also Read… மக்கள் காட்டும் அன்பும் பாசமும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது – சாய் அபயங்கர்