மக்கள் காட்டும் அன்பும் பாசமும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது – சாய் அபயங்கர்
Music director Sai Abhyankkar recent interview viral on social media | தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபயங்கர் மக்கள் தன்மீது வைத்து உள்ள அன்பையும் பாசமும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளராக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் ஒரே மகனாக இவர் இசைத் துறையில் ஆரம்ப காலக்கட்டத்தில் சுயாதீன பாடல்களை எழுதி இயக்கி நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இவர் தற்போது தமிழ் மொழியில் அதிக அளவிலான படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் இவர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனது என்னவோ மலையாள சினிமாவில் தான். அதன்படி மலையாள சினிமாவில் வெளியான பல்டி என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது இசையில் இதுவரை டியூட் மற்றும் கருப்பு ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் ஓம், பென்ஸ், மார்ஷ, சூர்யா 48, ராக்கா மற்றும் PRS01 ஆகியப் படங்களில் தற்போது இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மக்கள் காட்டும் அன்பும் பாசமும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது:
பேட்டி ஒன்றில் சாய் அபயங்கரிடம் ரசிகர்கள் உங்களை இசை என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த சாய் அபயங்கர் பேசியதாவது, இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. மக்கள் காட்டும் அன்பையும் பாசத்தையும் காண்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது. இன்னும் கடுமையாக உழைத்து, தொடர்ந்து தரமான இசையை வழங்க வேண்டிய ஒரு பொறுப்பாகவே நான் இதைப் பார்க்கிறேன். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால், நாங்கள் நாளொன்றுக்கு 17 முதல் 18 மணி நேரம் வரை உழைக்கிறோம்; தூக்கம், உணவு என அனைத்தும் ஸ்டுடியோவிலேயேதான் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Keerthy Suresh: அவரு இனிமே தளபதி இல்ல.. CM- சார்… முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Q: How Does it Feel to be called as “iSai”..❓#Saiabhyankkar: I don’t know how to take it.. It’s truly heartwarming to see the love and affection from people. I see it as a responsibility to work even harder and consistently deliver good music. We work 17–18 hours a day because… pic.twitter.com/gB0DFol5zb
— Laxmi Kanth (@iammoviebuff007) July 5, 2026
Also Read… பெத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!