AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதர்வாவின் இதயம் முரளி பட ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Idhayam Murali Release Date: நடிகர் அதர்வாவின் நடிப்பில், வித்தியாசமான காதல் கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டுவந்த திரைப்படம்தான் இதயம் முரளி. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதர்வாவின் இதயம் முரளி பட ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!
அதர்வாவின் இதயம் முரளிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jul 2026 21:21 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் கனவு கண்ணனாக இருந்துவருபவர் அதர்வா (Atharvaa). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2025ம் ஆண்டில் இவர் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்த படம் டிஎன்ஏ (DNA). இதில் அதர்வா வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடித்து, 2026ம் ஆண்டில் வெளியான பராசக்தி (Parasakthi) படத்திலும், அவரின் தம்பியாக அதர்வா நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதையடுத்து அதர்வாவின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புது படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran), இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukundhan) என இரு நடிகைகள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிரடி மற்றும் எமோஷனல் காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதனை முன்னிட்டு, இன்று (03/07/2026) இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரித்விராஜ் சுகுமாரின் ஐ, நோபடி படத்திலிருந்து வெளியானது ராவு தாண்டி பாடலின் லிரிக்கள் வீடியோ

அதர்வாவின் இதயம் முரளி பட ட்ரெய்லர் அப்டேட்:

இப்படத்தில் அதர்வா மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவன் என ஒரு எமோஷனல் மற்றும் பீல் குட் காதல் கதைக்களத்தில் நடித்திருக்கிறார். இதில் அதர்வாவுடன் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். ஜூலை 10ம் தேதியில் இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் 2026ம் ஆண்டு ஜூலை 04ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகினி அணிவதில் என்ன தவறு? அதிரடியாக தனது கருத்தை முன்வைத்த மாளவிகா மோகனன்!

இதயம் முரளி பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இதயம் முரளி படமானது பீல் குட் காதல் கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், ஃபஹத் பாசில், ரக்ஷன், தமன் எஸ் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படமானது நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us